ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 2028 ஆம் ஆண்டிற்குள் ரூ. 5,000 ஆக உயர கூடும் என ஈக்வினாமிக்ஸ் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனர் ஜி சொக்கலிங்கம் கணித்துள்ளார்.
அடுத்த 4-5 ஆண்டுகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகளின் விலை 100 சதவீதம் உயரக்கூடும் என்று கூறினார். மே 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் 0.23 சதவீதம் உயர்ந்து 2,484 ரூபாயாக இருந்தது.

இந்த நிலையில் ஜி சொக்கலிங்கம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குறித்து கூறுகையில் ரிலையன்ஸ் ஒரு 'மினி எகானமி'யாக உருவாகி வருகிறது. இந்நிறுவனம் தொழில்நுட்ப உதவியுடன், அதன் கட்டமைப்புகளை பயன்படுத்தி அனைத்து வணிக பிரிவுகளிலும் நுழைவது மட்டும் அல்லாமல் ஒன்றுக்கொன்று ஒருங்கிணைக்கிறது.
இதனால் வேறு எந்த நியூ ஏஜ் ஈ-காமர்ஸ் நிறுவனங்களை காட்டிலும் நான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை வாங்குதை உறுதியாக பரிந்துரை செய்கிறேன் என ஈக்வினாமிக்ஸ் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனர் ஜி சொக்கலிங்கம் தெரிவித்தார்.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தொலைத்தொடர்பு மற்றும் ரீடைல் வணிகங்களின் வருவாய் மற்றும் லாபத் தளத்தை பன்மடங்கு உயர்த்தியுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இப்போது ரிலையன்ஸ் புதுப்பிக்கத்தக்க மற்றும் கிரீன் எனர்ஜி, FMCG, மீடியா மற்றும் நிதிச் சேவைகள் வணிகங்களில் இறங்கியுள்ளனர்.
கடந்த 20 - 25 வருடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பல வர்த்தகத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்து லாபகரமானதாக மாற்றியுள்ளனர், பல வர்த்தகத்தில் சாதனையும் படைத்துள்ளனர். இதனால் புதிதாக இறங்கியுள்ள துறையில் ரிலையனஸ் பெரிய அளவிலான வளர்ச்சியை அடையும் என ஜி சொக்கலிங்கம் தெரிவித்தார்.

இதன் மூவம் அடுத்த 4-5 ஆண்டுகளில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஒரு சிறிய பொருளாதாரமாக இருக்கும் மற்றும் அதன் வர்த்தகம் சந்தை மதிப்பீடு அளவு இந்தியாவில் உள்ள ஒரு சிறிய மாநிலத்துடன் ஒப்பிடப்படும் அளவுக்கு உயரும் என தெரிவித்தார்.
போட்டி மிகுந்த FMCG துறையில் வெற்றிபெற பல தசாப்தங்கள் பழமையான பிராண்டுகளை வாங்கி மக்களிடம் வேகமாகழும், எளிதாகவும் நுழைந்துள்ளனர். இதுவே அதன் ஸ்மார்ட்டான முடிவுக்கு கொள்கைக்கும் முக்கிய உதாரணமாக உள்ளது.

இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை ஒருவர் வாங்கி அடுத்த 4-5 ஆண்டுகளுக்கு ஹோல்டு செய்து வைத்திருந்தால் 100 சதவிகிதம் வளர்ச்சியை பார்க்க முடியும் என நான் கூறுவேன் என்று ஜி சொக்கலிங்கம் தெரிவித்தார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications