இந்திய ரீடைல் சந்தையில் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் ரிலையன்ஸ் குழுமத்தின் ரீடைல் பிரிவு தொடர்ந்து தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பல புதிய முயற்சிகளைச் செய்து வருகிறது.
இதன் அடிப்படையில் கடந்த சில மாதமாகத் தொடர்ந்து FMCG துறையில் பல பொருட்களைச் சொந்தமாகத் தயாரித்து ஆன்லைன் மற்றும் ஆப்லைன் சந்தையில் விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில் ஒட்டுமொத்த ரீடைல் மற்றும் FMCG வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் பொருட்டு ரிலையன்ஸ் மொத்த விற்பனை சந்தையில் இறங்க உள்ளது. இது சந்தையில் பெரும் மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும்.
METRO AG நிறுவனம்
இந்தியாவில் போட்டியை தாக்கு பிடிக்க முடியாமல் இந்திய சந்தையை விட்டு வெளியே முடிவு செய்த ஜெர்மனி நாட்டு மொத்த விலை விற்பனை நிறுவனமான METRO AG நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தை விற்பனை செய்து நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்தது.
ரிலையன்ஸ் ரீடைல்
மெட்ரோ நிறுவனத்தின் கடைகள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தக மாடல் இந்திய சந்தைக்கு மிகவும் முக்கியமானது. இதனால் மெட்ரோ ஏஜ நிறுவனத்தை உள்நாட்டு நிறுவனங்கள் முதல் வெளிநாட்டு நிறுவனங்கள் வரையில் போட்டிப்போட்டது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ஆனால் கடைசியில் வெற்றி என்ற இடத்திற்குச் சென்றுள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான். அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வெளியாகாத நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மெட்ரோ ஏஜி நிறுவனத்தைக் கைப்பற்றுவதற்கான இறுதி ஒப்பந்தம் குறித்துப் பேச்சுவார்த்தை துவங்கி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மெட்ரோ நிறுவனம்
இந்தியாவில் 2003 ஆம் ஆண்டு நுழைந்த மெட்ரோ நிறுவனம் சுமார் 31 மொத்த விலை விற்பனை கடைகளை வைத்துள்ளது. இந்நிறுவனத்திற்குச் சிறு, குறு ரீடைல் விற்பனையாளர்கள் முதல் பெரிய ஹோட்டல்கள் வரையில் வாடிக்கையாளர்களைக் கொண்டு உள்ளது.
போட்டி
தாய்லாந்து நாட்டின் CP Group மெட்ரோ ஏஜி நிறுவனத்தைக் கைப்பற்ற போட்டிப்போட்ட நிலையில் தற்போது பின்வாங்கியுள்ளது. இதனால் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் மெட்ரோ ஏஜி நிறுவனத்தை 1 - 1.2 பில்லியன் டாலர் மதிப்பிற்கு வாங்க திட்டமிட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications