பல ஆண்டுகளுக்கு முன்ப இந்தியாவின் பில்லியனர்களில் ஒருவரான அனில் அம்பானி, இன்று பல ஆயிரல் கோடி கடனுக்கு அதிபதியாக உள்ளார்.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வருகின்றார். அனில் அம்பானியின் பல நிறுவனங்களும் இன்று பல ஆயிரம் கோடி கடனில் தத்தளித்து வருகின்றன.
சொல்லப்போனால் தனது சொத்தை விற்றுகூட கடனை அடைக்க முடியாத நிலையில் உள்ளார். சமீபத்தில் ஒரு வழக்கில் ஆஜரானவர், தனது வழக்கு செலவினங்களுக்காக, தனது மனைவியின் நகைகளை விற்று செலவு செய்வதாக கூறினார்.
ரிலையன்ஸ் இன்ப்ராஸ்டிரக்சர் பங்கு விற்பனை
இந்த நிலையில் அனில் அம்பானி மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இன்ப்ராஸ்டிரக்சர் நிறுவனம் பெரும் கடன் பிரச்சனையில் தத்தளித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் தனது 74% பங்கினையும் இந்தியா கிரிட் டிரஸ்டினை சேர்ந்த PKTCL நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் இதன் கடன் தொகை அடைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
விற்பனை மதிப்பு எவ்வளவு?
இது குறித்து ரிலையன்ஸ் இன்ப்ராஸ்டிரக்சர் நிறுவனம் தனது அறிக்கையில், இந்த பங்கு விற்பனையை 900 கோடி ரூபாய்க்கு வெற்றிகரமாக முடித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்த நிறுவனத்தின் கடன் நிலுவையை 14000 கோடி ரூபாயில் இருந்து, 13,100 கோடி ரூபாயாக குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
யார் இந்த இண்டிகிரிட்
இந்த ஒப்பந்தம் கடந்த நவம்பர் 2020லேயே அறிவிக்கப்பட்டது. இது குறித்தான ஒப்பந்தத்திலும் ரிலையன்ஸ் இன்ப்ரா - இண்டிகிரிட் தரப்பிலும் அப்போது கையெழுத்திடப்பட்டது. இதனையடுத்து தான் தற்போது இந்த பங்கு விற்பனை முடிந்துள்ளது. இண்டிகிரிட் இந்தியாவின் பவர் துறையினை சேர்ந்த உள்கட்டமைப்பு முதலீட்டு அமைப்பாகும். இது ஏஏஏ ரேட்டிங் கொண்ட ஒரு பவர் செக்டாரை சேர்ந்த நிறுவனமாகும்.
வளர்ச்சி அதிகரிக்கும்
இந்த indigrid நிறுவனம், 12 பவர் டிரான்ஸ்மிஷன்களை கொண்டுள்ளது. இதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்து மதிப்பு 14,500 கோடி ரூபாயாகும். இந்த நிலையில் மிகப்பெரிய உள்கட்டமைப்பு துறையை சேர்ந்த ரிலையன்ஸ் இன்ப்ராஸ்டிரக்சர் நிறுவனத்தின் பங்குகளை இது கையக்கப்படுத்தியுள்ளது. ஆக இந்த ஒப்பந்தத்தின் மூலம் இண்டிகிரிட் தனது உள்கட்டமைப்பு சேவையினை இன்னும் மேம்படுத்த முடியும். பல புதிய திட்டங்களை போட முடியும்.


Click it and Unblock the Notifications