இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் தொலைத்தொடர்பு வலையமைப்பை விரிவுபடுத்தவும், 5ஜி சேவைகள், ரீடைல் விற்பனை மற்றும் நியூ எனர்ஜி வணிகம் ஆகியவற்றுக்கு அடுத்த நான்கு ஆண்டுகளில் சுமார் 75,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளார்.
அதானி குழுமத்தின் வர்த்தகம் எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் இயங்கி வந்தாலும், பங்குச்சந்தையில் அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் கூட 3வது இடத்தில் இருந்து 20 இடங்களுக்குப் பின் தள்ளப்பட்டார்.
இந்த நிலையில் இந்தியாவின் பெரும் வர்த்தகச் சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் புதிய முதலீட்டு திட்டத்தின் அறிவிப்பு முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்ய வாய்ப்பு உருவாக்கியுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
அதானி குழும பங்குகளின் தொடர் தடுமாற்றத்திற்கு மத்தியில் ரீடைல் முதலீட்டாளர்கள் அதிகப்படியான முதலீட்டு மதிப்பை இழந்து வரும் வேளையில், முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மாபெரும் முதலீட்டுத் திட்டம் ரீடைல் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் என நம்பப்பட்ட நிலையில் பலன் அளிக்கவில்லை. பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் நிலை என்ன தெரியுமா..?
75000 கோடி ரூபாய் முதலீடு
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உத்தரப் பிரதேச மாநிலத்தில் டெலிகாம் நெட்வொர்க்-ஐ விரிவுபடுத்துவதற்கும், 5ஜி சேவைகளை அறிமுகம் செய்வதற்கும் அடுத்த 4 வருடத்தில் 75000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
ரீடைல் மற்றும் நியூ எனர்ஜி
இந்த 75000 கோடி ரூபாய் முதலீடு திட்டத்தில் டெலிகாம் துறை மட்டும் அல்லாமல் ரீடைல் மற்றும் நியூ எனர்ஜி ஆகிய பிற பிரிவு வணிகமும் அடங்கும். இதன் மூலம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் புதிய வேலைவாய்ப்புகளும், வர்த்தகமும் உருவாகும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
முதலீட்டாளர் உச்சி மாநாட்டு
உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலீட்டாளர் உச்சி மாநாட்டில் பேசிய முகேஷ் அம்பானி, தனது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ டிசம்பர் 2023க்குள் மாநிலம் முழுவதும் 5ஜி சேவைகளை வெளியிடும் என்று உறுதி அளித்தார்.
பயோ-எனர்ஜி
மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் 10 ஜிகாவாட் அளவிலான புதுப்பிக்கத்தக்க எனர்ஜி கட்டமைப்பை அமைக்க உள்ளதாகவும், இதேபோல் இந்த மாநிலத்தில் பயோ-எனர்ஜி பிஸ்னஸ்-ஐ புதிதாகத் தொடங்க உள்ளதாகவும் முகேஷ் அம்பானி உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலீட்டாளர் உச்சி மாநாட்டில் பேசியுள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 75000 கோடி ரூபாய் முதலீடு செய்யும் அறிவிப்பு முதலீட்டாளர்களை ஈர்க்கவில்லை. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் விலை 1.21 சதவீதம் சரிந்து 2327.00 ரூபாயாக உள்ளது. இன்று ஒரு பங்கிற்கு 28.25 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 52 வார உயர்வு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் இன்று காலை வர்த்தகம் துவங்கும் போது 2355.40 ரூபாய்க்கு துவங்கி 2,321.60 ரூபாய் வரையில் சரிந்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் 52 வார உயர்வு விலை 2855.00 ரூபாய்.
கடந்த சில நாட்களாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளில் ஏற்பட்டு வரும் சரிவு முகேஷ் அம்பானி சொத்து மதிப்பில் ஓட்டையை ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications