மீசையை முறுக்கும் ஜியோவின் 3ஜிபி டேட்டா பிளான்! ஏர்டெல், வொடா. ஐடியாவை விட 12% விலை கம்மி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் உலகத்தை கொத்து பரோட்டா போட்டுக் கொண்டு இருக்கிறது. பலரின் வேலை ஊசலாடிக் கொண்டு இருக்கிறது.

 

நிறுவனங்கள் வியாபாரம் இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள், பங்குச் சந்தைகள் தட தடவென சரிந்துக் கொண்டு இருக்கிறது.

ஆனால் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் போன்ற இளவட்டங்களோ... அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ், ஹாட் ஸாடார்... போன்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் அப்ளிகேஷன்களில் மூழ்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆத்தி... IIT, IIM பசங்க வேணாம்யா! தெறித்து ஓடும் நடுத்தர கம்பெனிகள்! ஏன்?

ரீசார்ஜ் திட்டங்கள்

ரீசார்ஜ் திட்டங்கள்

இந்த இளசுகளை மனதில் வைத்துக் கொண்டு, நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டா கொடுக்கும் விதத்தில் சில திட்டங்கள் நம் ஏர்டெல், வொடாபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களிடம் இருக்கின்றன. இதில் எந்த திட்டம் சீப் என்பதைத் தான் பார்க்கப் போகிறோம்.

ஏர்டெல்

ஏர்டெல்

இன்று வரை ரிலையன்ஸ் ஜியோவோடு மல்லு கட்டிக் கொண்டிருக்கும் ஒரே இந்திய டெலிகாம் நிறுவனம் ஏர்டெல் மட்டும் தான். இந்த நிறுவனம் 398 ரூபாய்க்கு, 28 நாள் வேலிடிட்டிக்கு, நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டா திட்டத்தை வைத்திருக்கிறார்கள். அதோடு அன்லிமிடெட் கால்கள், நாள் ஒன்றுக்கு 100 எஸ் எம் எஸ், இலவச ஹலோ டியூன், இலவச ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் சேவை, விங்க் மியூசிக் போன்றவைகளையும் கொடுக்கிறார்கள்.

வொடாபோன் ஐடியா
 

வொடாபோன் ஐடியா

எதிர்காலம் என்ன என்றே தெரியாத அளவுக்கு தடுமாறிக் கொண்டு இருக்கும் வொடாபோன் ஐடியா, 28 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டா, நாள் ஒன்றுக்கு 100 எஸ் எம் எஸ், அன்லிமிடெட் கால்கள், வொடாபோன் ப்ளே சப்ஸ்கிரிப்ஷன், ஜி 5 சப்ஸ்கிரிப்ஷன் போன்றவைகள் எல்லாம் வழங்குகிறார்கள். இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை 398 ரூபாய்.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

சிங்கம் சிங்கிலா தான் வரும் என்கிற ரீதியில், ரிலையன்ஸ் ஜியோ மட்டும் 28 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டா 100 எஸ் எம் எஸ் உடன், ஜியோ டூ ஜியோ அன்லிமிடெட் கால்கள், ஜியோ டூ நான் ஜியோ எண்களுக்கு சுமார் 1000 நிமிடங்கள் டாக் டைம், அதோடு ஜியோ அப்ளிகேஷன்கள் இலவசம் என அள்ளிக் கொடுக்கிறார்கள். அதுவும் வெறும் 349 ரூபாய்க்கு.

யார் விலை மலிவு

யார் விலை மலிவு

ஏர்டெல், வொடாபோன் ஐடியா ஆகிய இரண்டு பேருமே 398 ரூபாய்க்குத் தான் மேலே சொன்ன சேவைகளை வழங்குகிறார்கள். ஆனால் ஜியோ 349 ரூபாய்க்கு எல்லா சேவைகளையும் வழங்குகிறார்கள். குறிப்பாக நாள் ஒன்றுக்கு 3 ஜிபி திட்டம். எனவே மற்ற நெட்வொர்க்குகளை விட 12 % விலை குறைவாகவே எல்லா சேவைகளும் கிடைக்கின்றன.

இன்னுமும் ரிலையன்ஸ் ஜியோ, விலை மலிவான டேட்டா திட்டங்களைக் கொடுப்பதில் கில்லியாகத் தான் இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

reliance jio 3GB data per day plan is 12 percent cheaper than airtel vodafone idea

The mukesh ambani leading reliance jio 3GB per day data plan is 12 % cheaper than airtel vodafone idea. reliance jio comes at rs 349. Airtel and vodafone idea comes at rs 398.
Story first published: Tuesday, April 7, 2020, 17:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X