இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை தங்கள் 5G வலையமைப்பு விரிவாக்கத்தை திடீரென குறைத்துள்ளது. 5ஜி தான் எதிர்காலம், இனி 4ஜி சேவையை யாரும் பயன்படுத்தமாட்டார்கள் என்றெல்லாம் கருத்து நிலவிய வேளையில் ஜியோ மற்றும் ஏர்டெல் மீண்டும் 4ஜி சேவை விரிவாக்கத்தையும் திட்டத்தையும் மெருகேற்ற முடிவு செய்துள்ளது.
இந்தியா முழுவதும் 5G தொழில்நுட்பம் மக்களைக் கையில் கொண்டு சேர்க்கும் கட்டமைப்பு இருந்தாலும், 5ஜி சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும், அளவும் குறைவாகவே உள்ளது. இதேபோல் 5ஜி சேவை மூலம் கிடைக்கக் கூடிய வருமானம் குறைவாக இருக்கும் காரணத்தால் நிறுவனங்கள் மீண்டும் 4ஜி சேவை பக்கமே திரும்புகிறது.

இதேவேளையில் ஏர்டெல் மற்றும் ஜியோ இந்த மாற்று பாதையில் 4G பயனர் தளத்தை புதிய, அதிக விலை கொண்ட சேவைக்கு மேம்படுத்த முன்னுரிமை அளிக்க உள்ளது. இதேபோல் பியூச்சர் போன் பயன்படுத்தும் மக்களை வேகமாக 4ஜி சேவைக்கு மாற்றும் முயற்சிகளையும் துரிதப்படுத்த உள்ளது.
இந்திய டெலிகாம் சந்தையின் தலைவராக இருக்கும் ஜியோவின் 5G வலையமைப்பு பயன்பாடு தற்போது வெறும் 15% ஆகும். இருப்பினும், ஜியோ இந்த புள்ளிவிவரத்தை மறுத்து 30 சதவீதத்திற்கும் அதிகமாகக் கணக்கு காட்டுகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. நோக்கியா மற்றும் எரிக்ஸன் ஆகியவை ஜியோவிற்கு 5G உபகரணங்களின் முதன்மை சப்ளையர்களாக இருக்கும் வேளையில் இப்புதிய திட்டம் வாயிலாக இதன் சப்ளையும் குறைந்துள்ளது.
ஜியோ தனது 5G வலையமைப்பு ஏற்கனவே இந்தியாவில் 90% க்கும் மேற்பட்ட பகுதிகளை உள்ளடக்கிய நெட்வொர்க்கில் கொண்டு வந்துள்ளது. இப்படியிருக்கையில் எப்போது ஜியோவை காட்டிலும் ஏர்டெல் 5ஜி சேவையில் அதிக வாடிக்கையாளர்களையும், நெட்வொர்க் பயன்பாட்டையும் அடைகிறதோ அப்போது தான் ஜியோ தனது 5ஜி நெட்வொர்க்கில் அடுத்தக்கட்ட நகர்வை முன்வைக்கும்.
2025 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜியோவின் மொத்த வாடிக்கையாளர் எண்ணித்தை 490 மில்லியனாக உள்ளது. இதில் 130 மில்லியன் வாடிக்கையாளர்கள் 5ஜி சேவையை பயன்படுத்துகிறார்கள். இதேபோல் ஜியோ ஏர்ஃபைபர், 5G அடிப்படையிலான பிக்சட் வயர்லெஸ் சேவை நாட்டு மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமடைந்து வருகிறது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!



Click it and Unblock the Notifications