ரிலையன்ஸ் ஜியோ, ஜியோ ப்ஓன் நெக்ஸ்ட் பெயரில் 4ஜி ஸ்மார்ட் போன்களை தயாரித்து விற்று வரும் நிலையில், செப்டம்பர் மாதம் முதல் 5ஜி போனை அறிமுகம் செய்ய உள்ளது என தகவகள் கூறுகின்றன.
ரிலையன்ஸ் ஜியோ 5 ஜி போன் குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், ஆகஸ்ட் 29-ம் தேதி நடைபெற உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டு பொது கூட்டத்தின் அறிவிப்பில் இது குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபக்கம் 5ஜி தொலைத்தொடர்பு சேவையை நாடு முழுவதும் தொடங்குகிறது குறித்தும் ரிலையன்ஸ் ஜியோ தீவிரம் காட்டி வருகிறது.
விலை
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் செப்டம்பர் மாதம் முதல் அல்லது தீபாவளி முதல் தங்களது 5ஜி போனை அறிமுகம் செய்யலாம். அதன் விலை 12 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகத் தான் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அப்படி 12 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டால் அதுதான் இந்திய மொபைல் போன் நிறுவனங்களின் குறைந்த விலை 5ஜி போனாக இருக்கும். மைக்ரோமேக்ஸ், லாவா உள்ளிட்ட நிறுவனங்கள் இதுவரையில் 5ஜி போனை அறிமுகம் செய்யவில்லை.
ஜியோ 5ஜி போன் சிறப்பம்சங்கள்
ஜியோ 5ஜி போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 SoC, 4ஜிபி ராம், 32 ஜிபி உட்புற சேமிப்பு உள்ளிட்டவை கிடைக்கும். 6.5 இஞ்ச் எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, 13 மெகா பிக்சல் பின் புற கேமரா, 8 மெகா பிக்சல் முன் புற கேமரா, பிரகத்தி ஓஎஸ் (கூகுளுடன் இணைத்துத் தயாரிக்கப்பட்டது) உடன் இந்த போன் வரும் என கூறப்படுகிறது.
ஃபியூச்சர் போன் வருமா
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடங்கப்பட்ட போது ஃபியூச்சர் போனிலும் 4ஜி சேவையுடன் ஜியோ போன், ஜியோ போனெ 2 என இரண்டு மாடல்களாக அறிமுகம் செய்தது. அதே போல 5ஜி ஃபியூச்சர் போனை அறிமுகம் செய்யுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஜியோ போன் நெக்ஸ்ட்
இதுவரையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ போன் நெக்ஸ்ட் மாடலை மட்டுமே ஸ்மார்ட் போனாக அறிமுகம் செய்துள்ளது. அதிலும் ஜியோ சிம் கார்டில் மட்டுமே இணையதள சேவையை பயன்படுத்த முடியும். வேறு நெட்ரோர்க் சிம் பயன்படுத்தினால் அழைப்புகள் மட்டுமே மேற்கொள்ள முடியும். தற்போது அறிமுகம் செய்ய உள்ள 5ஜி போனில் எல்லா நெட்வொர்க் சிம் கார்டுகளும் பயன்படுத்தும் வகையில் வருமா எனவும் எதிர்பார்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

இப்பவே இது நடக்கும்னு எதிர்பாக்கல.. இந்திய ஐடி நிறுவனங்களை மொத்தமாக விழுங்கிய Anthropic..!!

வருமானம் போனாலும் பரவாயில்ல!! டிசிஎஸ் எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்!!

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் விலை ஏறினாலும், இறங்கினாலும் கையில் இருக்கும் காசுக்கு தங்கத்தை வாங்கி வைங்க..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications