முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி இந்தியாவின் நம்பர் ஒன் டெலிகாம் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவில் தற்போது ஏர்டெல், வோடபோன், ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்கள் டெலிகாம் சேவைகளை வழங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அமைப்பாக ட்ராய் செயல்பட்டு வருகிறது.

ட்ராய் ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் டெலிகாம் சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் ட்ராய் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள டெலிகாம் சந்தாதாரர்களின் எண்ணிக்கை இரண்டாவது முறையாக 1.2 பில்லியன் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது.
ட்ராய் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் மார்ச் மாதத்தில் இந்தியாவில் இருந்த டெலிகாம் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1198.28 மில்லியன் ஆகும். இதுவே ஏப்ரல் மாதத்தில் 0.16 சதவீதம் உயர்ந்து 1201.22 மில்லியன் என அதிகரித்துள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் மொத்த டெலிகாம் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1.2 பில்லியன் என்ற எண்ணிக்கையை தொட்டது. அதே ஆண்டில் ஜூலை மாதம் 1.21 பில்லியன் என்ற உச்சத்தை எட்டியது. இந்த நிலையில் மீண்டும் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் டெலிகாம் சந்தாதாரர்களின் எண்ணிக்கை மீண்டும் 1.2 பில்லியன் என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.
மொபைல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தான் இந்த அளவு சந்தாதாரர்களின் எண்ணிக்கை உயர்வதற்கு காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்தியாவில் இருந்த மொபைல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 1165.49 மில்லியன் ஆகும்.
குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மட்டும் புதிதாக 2.68 மில்லியன் புதிய சந்தாதாரர்களை சேர்த்துள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மொத்த சந்தாதாரர்கள் எண்ணிக்கை 472.42 மில்லியன் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
ஏர்டெல் நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் 752,000 வாடிக்கையாளர்களை புதிதாக சேர்த்திருக்கிறது. இதன் மூலம் ஏர்டெல் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 267.57 மில்லியன் என அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்கள் பெருமளவில் சந்தாதாரர்களை இழந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
அதாவது ஏப்ரல் மாதத்தில் மட்டும் அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் 1.23 மில்லியன் சந்தாதாரர்களை இழந்துள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனம் 735,000 சந்தாதாரர்களை இழந்துள்ளது. எம்டிஎன்எல் நிறுவனம் 3,702 வாடிக்கையாளர்களையும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் 29 வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளது.
இந்தியாவில் லேண்ட்லைன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 33.79 என இருந்து ஏப்ரலில் 34.26 மில்லியன் என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது. இந்த பிரிவிலும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தான் புதிதாக 355,900 வாடிக்கையாளர்களை சேர்த்திருக்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications