சென்னை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 47வது வருடாந்திர பொதுக் கூட்டம் இன்று நடந்தது, இக்கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி, ஜியோ ஏஐ-க்ளவுட் வெல்கம் ஆஃபர் அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவித்தார். இந்த திட்டம் தீபாவளிக்கு அறிமுகப்படுத்தப்படும் எனவும் முகேஷ் அம்பானி தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் விநாயகர் சதுர்த்தி அல்லது தீபாவளி பண்டிகையின் போது ஏதாவதொரு சலுகையும், திட்டத்தையும் அறிவிக்கும் வழக்கத்தைக் கொண்டு உள்ளது.
இதன் அடிப்படையில் ஜியோ இந்த ஏஐ-க்ளவுட் வெல்கம் ஆஃபர் மூலம் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 100 ஜிபி வரையிலான இலவச கிளவுட் சேமிப்பை பயன்படுத்த முடியும். இது 'எல்லோருக்கும் AI எல்லா இடங்களிலும் AI' என்ற ரிலையன்ஸின் புதிய கொள்கையை முக்கிய திட்டமாக பார்க்கப்படுகிறது.

எப்படி கூகுள் ட்ரைவ் இலவச சேமிப்பு கொடுத்ததோ அதேபோல் ஜியோ இந்த 100 ஜிபி இலவச டேட்டா ஸ்டோரேஜ் கொடுக்கிறது. இதுகுறித்து முகேஷ் அம்பானி பேசுகையில் "ஜியோ பயனாளர்கள் தங்களின் புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் மற்றும் பிற டிஜிட்டல் கண்டென்ட் மற்றும் தரவுகளை பாதுகாப்பாக சேமித்து வைக்க 100 ஜிபி வரையிலான இலவச கிளவுட் சேமிப்பு கிடைக்கும்" என்று முகேஷ் அம்பானி கூறினார்.
இதேவேளையில் ஜியோ புதிய கிளவுட் சேவைகளில் பல அம்சங்களை கொண்டுள்ளது:
ஜியோ டிவிஓஎஸ்: ரிலையன்ஸ் இன்று அறிவித்துள்ள ஜியோ டிவிஓஎஸ் என்பது ஜியோ செட் டாப் பாக்ஸ்களுக்கு இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒரு பிரத்தியேக ஆப்ரேட்டிங் சிஸ்டம். இப்புதிய ஜியோ டிவிஓஎஸ் மூலம் அல்ட்ரா எச்.டி 4கே வீடியோ, டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மாஸ் ஆகியவற்றை காண "வேகமான, மென்மையான மற்றும் மேம்பட்ட அனுபவத்தை" வழங்குகிறது என்று ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் கிரண் தாமஸ் கூறினார்.
ஜியோ ஹோம் IoT: ஜியோ டிவிஓஎஸ் உடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஜியோ ஹோம் IoT சொல்யூஷன்ஸ், வீட்டை ஆட்டோமேஷன் செய்வது, வீட்டின் இன்டலிஜென்ஸ் மற்றும் பதில் திறனை மேம்படுத்தும் சேவைகள் இதில் கிடைக்கும்.
ஜியோ டிவி+: ஆப்பிள் டிவி+-க்கு போட்டியாக ஜியோடிவி+, லைவ் டிவி, டிவி நிகழ்ச்சிகள் மற்றும் ஆப்ஸ்களை ஒரே தளத்தில் இணைக்கிறது. ஜியோடிவி+-ல் 860க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+, ஹாட்ஸ்டார் போன்ற சேவைகளிலிருந்து கண்டென்ட்களை வழங்குகிறது. இவை அனைத்தும் ஹை டெபினிஷனில் உள்ளன என்று ஆகாஷ் அம்பானி வலியுறுத்தினார்.
ஜியோ போன்கால் AI: ஜியோ போன்கால் AI என்பது AI சேவையை போன் கால்களுடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு புதிய சேவையாகும். இது ஜியோ வாடிக்கையாளரின் அழைப்புகளை பதிவு செய்ய, சேமிக்க, இருதரப்புக்கும் மத்தியிலான உரையாடலை எழுத, சுருக்கம் செய்ய மற்றும் மொழிபெயர்ப்பு செய்வதையும் அனுமதிக்கிறது. இந்த அனைத்து தரவுகளும் ஜியோ கிளவுட் மூலம் நிர்வகிக்கப்படும் என்று ஆகாஷ் அம்பானி விளக்கினார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications