ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் சில தினங்களுக்கு முன்பு அதன் ப்ரீபெய்டு சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்திய நிலையில், இன்று ஜியோ நிறுவனமும் ப்ரீபெய்டுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
ஏர்டெல் நிறுவனம் தனது கட்டண உயர்வை நவம்பர் 26ம் தேதி முதல் அமல்படுத்திய நிலையில், வோடஃபோன் நிறுவனமும் அதனை தொடர்ந்து அமல்படுத்தியது.
இதனை தொடர்ந்து ஜியோ நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டதை போலவே, தற்போது ஜியோவும் தனது கட்டண உயர்வை அறிவித்துள்ளது.
ஜியோ கட்டண அதிகரிப்பு
இது குறித்து வெளியான ஜியோவின் கட்டண அறிவிப்பு அறிக்கையில், ஜியோவின் கட்டண உயர்வானது டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
இந்த கட்டண உயர்வால் பல திட்டங்களுக்கான விலை விகிதமும் அதிகரித்துள்ளன. ஏர்டெல்லினை போல ஜியோவின் கட்டண அதிகரிப்பு இருக்காது. ஏர்டெல் வோடபோன் நிறுவனங்கள் ஏற்கனவே நஷ்டத்தில் உள்ளன. ஆனால் ஜியோ ஏற்கனவே லாபத்தில் தான் உள்ளது. ஆக பெரியளவில் ஏற்றம் இருக்காது என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது 21% வரையில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜியோ போன் திட்டம் அதிகரிப்பு
ஜியோபோனுக்கான 28 நாட்களுக்கான 75 ரூபாயில் திட்டத்தின் கட்டணம், 91 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதே டேட்டா ஆட் ஆன் திட்டங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதில் 51 ரூபாய் திட்டம், இனி 61 ரூபாய்க்கு கிடைக்கும். இதில் 6 ஜிபி டேட்டா கிடைக்கும்.
இதே 101 ரூபாய் திட்டம் இனி 121 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 12 ஜிபி டேட்டா கிடைக்கும்.
இதுவே 251 ரூபாய் மதிப்பிலான டேட்டா திட்டத்தில் 50 ஜிபி டேட்டா கிடைக்கும். இது 30 நாட்களுக்கு வேலிடிட்டி கொண்டது.
28 நாட்கள் வேலிடிட்டி
28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களில் 129 ரூபாய் மதிப்பிலான திட்டம், 155 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் கால், 300 இலவச எஸ் எம் எஸ்கள் கிடைக்கும். இதே 199 ரூபாய் மதிப்பிலான திட்டம், 239 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் தினசரி 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால், தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் கிடைக்கும்.
இதே 249 ரூபாய் திட்டத்தினை, 299 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ்.எம்.எஸ்-கள் கிடைக்கும்.
24 நாட்கள் வேலிடிட்டி
இதே 149 ரூபாய் மதிப்பிலான திட்டத்தினை, 179 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் வேலிடிட்டி 24 நாட்களாகும். இதில் தினசரி 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ்.எம்.எஸ்-கள் கிடைக்கும்.
56 நாட்கள் வேலிடிட்டி
399 ரூபாய் மதிப்பிலான திட்டத்தினை, 476 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் வேலிடிட்டி 56 நாட்களாகும். இதில் தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ்.எம்.எஸ்-கள் கிடைக்கும்.
இதே 444 ரூபாய் மதிப்பிலான திட்டத்தினை, 533 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் வேலிடிட்டி 56 நாட்களாகும். இதில் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ்.எம்.எஸ்-கள் கிடைக்கும்.
84 நாட்கள் வேலிடிட்டி
329 ரூபாய் மதிப்பிலான திட்டத்தினை, 395 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் வேலிடிட்டி 84 நாட்களாகும். இதில் 6 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால் சேவை, இதில் 1000 இலவச எஸ்.எம்.எஸ்-கள் கிடைக்கும்.
555 ரூபாய் மதிப்பிலான திட்டத்தினை, 666 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் வேலிடிட்டி 84 நாட்களாகும். இதில் தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால் சேவை, இதில் தினசரி 100 இலவச எஸ்.எம்.எஸ்-கள் கிடைக்கும்.
599 ரூபாய் மதிப்பிலான திட்டத்தினை, 719 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் வேலிடிட்டி 84 நாட்களாகும். இதில் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால் சேவை, இதில் தினசரி 100 இலவச எஸ்.எம்.எஸ்-கள் கிடைக்கும்.
வருடாந்திர திட்டங்கள்
1,299 ரூபாய் மதிப்பிலான திட்டத்தினை, 1,559 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் வேலிடிட்டி 336 நாட்களாகும். இதில் 24 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால் சேவை, இதில் 3,600 இலவச எஸ்.எம்.எஸ்-கள் கிடைக்கும்.
இதே 2,399 ரூபாய் மதிப்பிலான திட்டத்தினை, 2,879 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் வேலிடிட்டி 365 நாட்களாகும். இதில் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால் சேவை, இதில் தினசரி 100 இலவச எஸ்.எம்.எஸ்-கள் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications