ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு 11 மாதங்கள் வேலிடிட்டி கொண்ட 895 ரூபாய் மதிப்பிலான ஒரு புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.
முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் குழுமத்திற்கு உட்பட்டது தான் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். ஜியோ நிறுவனம் தங்களுடைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவ்வப்போது புதிய புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் குறைந்த செலவில் அதிக வேலிடிட்டி கொண்ட ஒரு புதிய திட்டத்தை ஜியோ அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் தகவல் தொடர்பு சேவையில் தனியார் நிறுவனங்கள் தான் முன்னணியில் இருக்கின்றன. இதில் ஜியோ நிறுவனம் தான் முதலிடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜியோ நிறுவனம் திடீரென தங்களுடைய ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணத்தை உயர்த்தியது. இதனை அடுத்து வாடிக்கையாளர்கள் பலரும் ஜியோவில் இருந்து பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மாறத் தொடங்கினர்.
எனவே வாடிக்கையாளர்களை இழந்து விடக்கூடாது என்பதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் 1000 ரூபாய்க்கும் கீழ் அதே வேளையில் 11 மாதங்களுக்கு வேலிடிட்டி கொண்ட திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இதன்படி 11 மாதங்களுக்கு அதாவது 336 நாட்களுக்கு வேலிடிட்டி கொண்ட புதிய திட்டம் ரீசார்ஜ் திட்டம் ஒன்றை ஜியோ அறிமுகம் செய்திருக்கிறது. இதன் கட்டணம் 895 ரூபாய் ஆகும்.
இந்த 895 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 50 எஸ்எம்எஸ்களை இலவசமாக அனுப்பிக் கொள்ளலாம். அடுத்ததாக அதேபோல இந்த ரீசார்ஜ் திட்டம் ஒவ்வொரு 28 நாட்களுக்கு ஒரு முறை உங்களுக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதாவது ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 2 ஜிபி டேட்டா என்ற வகையில் 336 நாட்களுக்கு நீங்கள் மொத்தமாக 24ஜிபி டேட்டாவை பெறுவீர்கள்.
இந்த ரீசார்ஜ் திட்டமானது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோ போன்கள் மற்றும் ஜியோ பாரத் போன்களை பயன்படுத்தும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஸ்மார்ட் போனில் ஜியோ சிம் கார்டுகளை பயன்படுத்துபவர்களுக்கு இந்த ரீசார்ஜ் திட்டங்கள் கிடைக்காது.
பொதுவாக ஜியோ நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ ஒரு வருடம் வரையிலான வேலிடிட்டி கொண்ட திட்டங்களுக்கு 1000 ரூபாய் அல்லது 2000 ரூபாய்க்கு மேல் தான் ரீசார்ஜ் கட்டணங்களை கொண்டிருக்கிறது. தற்போது ஆயிரம் ரூபாய்க்கு கீழ் 11 மாதங்களுக்கு செல்லுபடியாகும் ஒரு திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications