ரிலையன்ஸ் ஜியோவில் இவ்வளவு திட்டங்கள் உள்ளனவா? எது பெஸ்ட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ஜியோவில் உள்ள சில பயனுள்ள திட்டங்கள் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

 

குறிப்பாக ஜியோவில் சில வருடாந்திர திட்டங்கள் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். இந்த ஓடிடி வசதியும் சேர்த்து அதன் அடிப்படையிலான வருடாந்திர திட்டங்கள் உள்ளன.

சமீபத்தில் தான் ஜியோ நிறுவனம் 4199 ரூபாய் மதிப்பிலான ஓடிடி சேவை அடிப்படையிலான திட்டத்தினை நீக்கியது. இந்த திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா கிடைக்கும். இதில் டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டார் சந்தாவும் உண்டு. தற்போதுள்ள வருடாந்திர திட்டங்களில் என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது? வாருங்கள் பார்க்கலாம்.

 என்னென்ன திட்டங்கள்?

என்னென்ன திட்டங்கள்?

தற்போது இரண்டு வகையான திட்டங்களை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன்று 2999 ரூபாய் மற்றும் 2879 ரூபாய் திட்டங்கள். இது தவிர 2545 ரூபாய் திட்டத்தினையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் 11 மாதம் அல்லது 336 நாட்கள் வேலிடிட்டியினை இந்த திட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

 ஜியோவில் ரூ.2999 திட்டம்

ஜியோவில் ரூ.2999 திட்டம்

இது ஜியோவின் மிக விலை உயர்ந்த வருடாந்திர திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டம் தீபாவளி சமயத்தில் அறிமுகப்படுத்திய ஒன்றாகும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 365 நாட்களுக்கு தினசரி 2.5 ஜிபி டேட்டா கிடைக்கும். இது தவிர 75 ஜிபி டேட்டாவானது போனஸ் ஆகவும் கிடைக்கும். அன்லிமிடெட் கால் சேவை மற்றும் தினசரி 100 இலவச எஸ் எம் எஸ் கிடைக்கும். கூடுதலாக ஜூமின் அஜியோ, ரிலையன்ஸ் டிஜிட்டல் உள்ளிட்ட பல ஆப்களுக்கான சேவையும் கிடைக்கும்.

ஜியோவின்  ரூ.2879 திட்டம்
 

ஜியோவின் ரூ.2879 திட்டம்

ஜியோவின் 2879 ரூபாய் மதிப்பிலான திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஒரு திட்டமாகும். இதன் மூலம் தினசரி 2 ஜிபி டேட்டா இலவசமாக கிடைக்கும். இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ் சேவையும் கிடைக்கும். இதில் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் சேவையும் கிடைக்கும்.

ஜியோவின் ரூ.2545 திட்டம்

ஜியோவின் ரூ.2545 திட்டம்

ஜியோவின் ரூ.2545 திட்டமானது நீண்டகால திட்டமாகும். இது 336 நாட்கள் வேலிடிட்டியை கொண்ட ஒரு திட்டமாகும். இதில் தினசரி 1.5ஜிபி டேட்டா கிடைக்கும். இதில் அன்லிமிடெட் டேட்டா கால் சேவை மற்றும் தினசரி 100 இலவச எஸ் எம் எஸ் சேவையும் கிடைக்கும். இதில் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் சேவை என பலவும் கிடைக்கும்.

கூடுதல் டேட்டா

கூடுதல் டேட்டா

ஃபிஃபா உலகக் கோப்பை 2022 நடைபெற்று வரும் நிலையில், கால்பந்து ரசிகர்களுக்கு பலனளிக்கும் விதமாக சில திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோவின் 222 ரூபாய் ரீசார்ஜ் திட்டங்கள் 50ஜிபி டேட்டாவினை கொடுத்து வருகின்றது. இதன் வேலிடிட்டி 30 நாட்களாகும். இந்த திட்டத்தில் கூடுதல் சலுகையினை பெற முடியாது. இதன் மூலம் 4ஜி டேட்டா கிடைக்கிறது. 299 ரூபாய் திட்டத்தின் மூலம் தினசரி 2ஜிபி டேட்டாவினையும், கூடுதலாக 50 ஜிபி டேட்டாவும் கிடைக்கிறது. இது

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

reliance jio annual packs start with 2 GB data with unlimited voice call

Jio has introduced Rs 2,999 and Rs 2,879 plans, and an annual plan worth Rs 2,545
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X