மாஸ் காட்டும் ஜியோ.. நம்பர் 1 நிறுவனம் இது தான்.. ஏர்டெல், வோடபோனுக்கு செம அடி தான்..!

ஜியோவின் வருகைக்கு பின்னர் தொலைத் தொடர்பு துறையில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது எனலாம். நிறுவனங்கள் பல ஜியோவின் போட்டியை சமாளிக்க முடியாமல் காணமல் போனதும் உண்மையே.

தற்போது தனிகாட்டு ராஜாவாக வலம் வரும் ஜியோ நிறுவனம், தனது போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கடுமையான சவலாக அமைந்துள்ளது என்றே கூறலாம்.

இந்த நிலையில் இந்தியாவில் கடந்த ஜூலை மாதத்தில் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக் இணைத்து, இந்தியாவில் 40 கோடி வாடிக்கையாளர்களைக் கடந்த, முதல் மொபைல் சேவை வழங்குனராக ரிலையன்ஸ் ஜியோ திகழ்கிறது.

ஒட்டுமொத்த தொலைத் தொடர்பு சந்தாதாரர்கள்

ஒட்டுமொத்த தொலைத் தொடர்பு சந்தாதாரர்கள்

இது குறித்து தொலைத்தொடர்பு துறை ஒழுங்குமுறை ஆணையமான டிராய்
வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இது தெரிய வந்துள்ளது. ஒட்டுமொத்த
தொலைத் தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஜூலை மாதத்தில் 116.4 கோடியாக
இருந்தது. இது ஜூன் மாதத்தில் 116 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொலைபேசி இணைப்புகள்

தொலைபேசி இணைப்புகள்

இதுவே தொலைபேசி இணைப்புகள் கடந்த ஜூன் மாதத்தில் 114 கோடியாக இருந்த
நிலையில், ஜூலை மாதத்தில் 114.4 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் நகரம்
மற்றும் கிராமப்புற பகுதிகளில் முறையே 61.9 கோடியாகவும், 52.1 கோடியாகவும்
உள்ளதாக டிராய் அறிவித்துள்ளது. இந்த தரவானது மாத சந்தாதாரர்களின்
அடிப்படையில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

பிக்ஸ்டு லைனிலும் ஜியோ தான் டாப்

பிக்ஸ்டு லைனிலும் ஜியோ தான் டாப்

இதே பிக்ஸ்டு லைன் இணைப்புகள் கடந்த சில ஆண்டுகளுக்கு பிறகு 1,98,20,419 ஆக அதிகரித்துள்ளது. இதிலும் ஜியோ தான் முன்னிலையில் உள்ளதாக டிராய் தரவுகள் கூறியுள்ளது. தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ வளர்ந்து வரும் அதே நேரத்தில், பொதுத்துறை நிறுவனமான பி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தினை கண்டு வருகின்றன.

ஜியோவின் பங்கு

ஜியோவின் பங்கு

ரிலையன்ஸ் ஜியோ தற்போது இந்திய மொபைல் சந்தையில் 35.03% பங்கினை கொண்டு, 40,08,03,819 வாடிக்கையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இதே பார்தி ஏர்டெல் மற்றும் பி எஸ் என் எல் நிறுவனங்கள் முறையே 32.6 லட்சம் மற்றும் 3.88 லட்சம் வாடிக்கையாளர்களை முறையே ஜூலை மாதத்தில் இணைத்துள்ளது.

பலத்த அடி வாங்கிய வோடபோன் ஐடியா

பலத்த அடி வாங்கிய வோடபோன் ஐடியா

ஆனால் வோடபோன் ஐடியா இதே ஜூலை மாதத்தில் 37 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதே எம் டி என் எல் நிறுவனம் 5,457 வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. மொபைல் பிரிவில் ஆதிக்கம் செலுத்தும் பிராட்பேண்ட் இணைப்புகள் ஜூன் மாதத்தில் 69.82 கோடியிலிருந்து, 1.03% அதிகரித்து, 70.54 கோடியாக ஜூலை மாதத்தில் அதிகரித்துள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.

மொத்த பிராட்பேண்ட் இணைப்பு

மொத்த பிராட்பேண்ட் இணைப்பு

இந்த பிராட்பேண்ட் இணைப்பிலும் ரிலையன்ஸ் ஜியோ தான் முதலிடம் வகித்துள்ளது. ஜியோ நிறுவனம் 40.19 கோடி வாடிக்கையாளர்களையும், பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் 15.57 கோடி வாடிக்கையாளர்களையும், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் 11.52 கோடி வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+