ரிலையன்ஸ் ஜியோ-வின் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் ப்ராஜெக்ட்ஸ் அண்ட் பிராப்பர்ட்டி மேனேஜ்மென்ட் சர்வீசஸ், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளைச் சுமார் 3,720 கோடி ரூபாய்க்குக் கையகப்படுத்தியுள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ-வின் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் ப்ராஜெக்ட்ஸ் அண்ட் பிராப்பர்ட்டி மேனேஜ்மென்ட் சர்வீசஸ், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளைச் சுமார் 3,720 கோடி ரூபாய்க்குக் கையகப்படுத்தியுள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.
ஏல போட்டியில் ரிலையன்ஸ் ஜியோ-வின் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் ப்ராஜெக்ட்ஸ் வெற்றிபெற்றாலும் பல மாதங்களாக வங்கி நிர்வாகம் ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் நிறுவனத்தை ரிலையன்ஸ் ஜியோ-வுக்கு ஒப்படைக்காமலேயே இருந்தது.
முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி தலைமையிலான டெலிகாம் சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ-வின் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் ப்ராஜெக்ட்ஸ், அவரது இளைய சகோதரர் அனில் அம்பானி நிர்வகிக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடனில் சிக்கிய நிலையில் இதன் டவர் மற்றும் ஃபைபர் சொத்துக்களைக் கொண்ட துணை நிறுவனமான ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல்-ஐ வாங்க 2019 நவம்பரில் ரூ.3,720 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது.
ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல்
ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் நிறுவனம், ரிலையன்ஸ் ப்ராஜெக்ட்ஸ் அண்ட் பிராப்பர்ட்டி மேனேஜ்மென்ட் சர்வீசஸ் நிறுவனத்திற்கு 10 ரூபாய் மதிப்புக் கொண்ட 50 லட்சம் ஈக்விட்டி பங்குகளையும், ரொக்கமாக மொத்தம் 5 கோடி ரூபாய்க்கு ஒதுக்கியதாகப் பங்குச்சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.
372 கோடி ஜீரோ கூப்பன்கள்
இதோடு 372 கோடி ஜீரோ கூப்பன்களை 10 ரூபாய் மதிப்பில் மாற்றத்தக்க கடனீட்டுப் பத்திரங்களைக் கொடுக்கப்பட்டு உள்ளது. இதை ரிலையன்ஸ் கொடுத்துள்ளது. இதன் மொத்தம் மதிப்பு 3,720 கோடி ரூபாய். இதன் மூலம் ரிலையன்ஸ் ப்ராஜெக்ட்ஸ், ரிலையன்ஸ் இன்பராடெல் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது.
NCLT அமைப்பு
முன்னதாக நவம்பர் மாதம், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT) ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல்லை கையகப்படுத்த RPPMSL க்கு அனுமதி வழங்கியது. அதன்பிறகு, ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல்லின் மொபைல் டவர் மற்றும் ஃபைபர் சொத்துக்களை வாங்குவதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 3,720 கோடி ரூபாய் தொகையை எஸ்பிஐ எஸ்க்ரோ கணக்கில் டெபாசிட் செய்தது.
ரிலையன்ஸ் ப்ராஜெக்ட்ஸ் அறிக்கை
அக்டோபர் 20 ஆம் தேதி ரிலையன்ஸ் ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ப்ராபெர்டி மேனேஜ்மென்ட் சர்வீசஸ் நிறுவனம் NCLT அமைப்பிக்கு சமர்ப்பித்த அறிக்கையில் தீர்வு நிதியை விநியோகிப்பதில் கடன் வழங்குபவர்களுக்கு இடையேயான தகராறுகள் தொடரும் வேளையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் -இன் டவர் மற்றும் ஃபைபர் சொத்துக்களைக் கையகப்படுத்துவதைத் தாமதப்படுத்துகிறது, இதோடு அவற்றின் மதிப்பை குறைந்து வருகிறது எனத் தெரிவித்துள்ளது.
வங்கிகள்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, தோஹா வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் மற்றும் எமிரேட்ஸ் வங்கி உள்ளிட்ட பிற கடன் வழங்கியவர்கள் மத்தியிலான நிதி விநியோகம் தொடர்பாக வழக்கு நடந்து வருகிறது.
நவம்பர் மாதம் கோரிக்கை
இந்த நிலையில் நவம்பர் மாதம் ரிலையன்ஸ் ஜியோ NCLT அமைப்பிற்கு அளித்த கோரிக்கையில் ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் நிறுவனத்தையும் அதன் சொத்துக்களையும் கைப்பற்றுவதற்காக, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா-வின் எஸ்க்ரோ கணக்கில் 3,720 கோடி டெபாசிட் செய்யத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தும், வரைவில் சொத்து கைமாற்றுவதற்கான பணிகளை வேகப்படுத்த கோரிக்கை வைத்தது. இதைத் தொடர்ந்து தான் தற்போது ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் இன்பராடெல் நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது.
More From GoodReturns

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!



Click it and Unblock the Notifications