மாஸ் காட்டும் ஜியோ.. இதிலும் நாங்க தான் டாப்பு.. தட்டு தடுமாறும் ஏர்டெல், வோடபோன் ஐடியா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே நேரம் சரியில்லை என்று தான் கூற வேண்டும்.

 

சொல்லப்போனால் கடந்த 2016ம் ஆண்டில் இருந்தே முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் நிறுவனம் இந்தியத் தொலைத் தொடர்புச் சந்தையில் நுழைந்ததில் இருந்தே பிரச்சனை தான்.

அதிலும் ஆரம்பத்தில் மொபைல் டேட்டா, வாய்ஸ் கால் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இலவசம் என்ற சலுகையோடு வாடிக்கையாளர்களை ஈர்க்கத் தொடங்கிய ஜியோ, மற்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை கவர்ந்தது என்றே கூறலாம்.

வருவாய் இழப்பு

வருவாய் இழப்பு

ஆனால் அதன் பின்னர் தான் ஐயூசி கட்டணம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. இதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தனது சேவைக் கட்டணங்களை உயர்த்தி வருவாயைப் பெருக்கத் தொடங்கியுள்ளது ஜியோ. எனினும் மறுபுறம் ஜியோவின் போட்டியை சமாளிக்க முடிமாமல், வோடஃபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட மற்ற நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை இழந்ததோடு, தங்களது வருவாயையும் இழக்கத் தொடங்கினர்.

ஜியோ தான் டாப்

ஜியோ தான் டாப்

மேலும் ஜியோ நெட்வொர்க்கினை விரிவுபடுத்துதல் மற்றும், பலத்த சலுகை, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது, அதிக முதலீடு, குறைந்த விலையில் மொபைல் போன் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலமாக நெட்வொர்க் தரத்தையும், சேவையையும் மேம்படுத்தியது ஜியோ. மொபைல் நெட்வொர்க் சேவையில் மற்ற நெட்வொர்க் நிறுவனங்களைக் காட்டிலும் ஜியோ மேம்பட்ட சேவையை வழங்கி வருவதாகவும், குறிப்பாக சொல்லவேண்டுமானால் மிக குறைந்த விலையில் டேட்டாக்களை வழங்கி வருவதாகவும் கூறப்பட்டது.

ஜியோவில் கட்டணம் குறைவு
 

ஜியோவில் கட்டணம் குறைவு

ஒரு கட்டத்தில் ஜியோவின் இலவச டேட்டா சலுகையை பெற மக்கள் ஜியோ வாடிக்கையாளர் சேவை மையங்களில் குவிந்தது கவனிக்கதக்கது. இந்த நிலையில், டேட்டா விலையும் மற்ற நிறுவனங்களோடு ஒப்பிடும்போது ஜியோவில் குறைவு தான் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் டிராய் அறிக்கையின் படி, கடந்த ஜனவரி மாதத்தில் 4ஜி டேட்டா பதிவிறக்க சேவையில், 27.2 mbps. வேகத்துடன் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

ஏர்டெல் இரண்டாவது இடம்

ஏர்டெல் இரண்டாவது இடம்

இதே ஜியோவைத் தொடர்ந்து ஏர்டெல் பதிவிறக்க வேகம் 7.9 mbps ஆக உள்ளது. அதனைத் தொடர்ந்து வோடஃபோன் 7.6 mbps ஆகவும், இதுவே ஐடியா 6.5 mbps ஆகவும் உள்ளன. இதுவே பதிவேற்ற வேகத்தில் வோடபோன் முதலிடத்தில் உள்ளதாகவும், அதன் வேகம் 6 mbps ஆகவும் உள்ளது. இதுவே ஜியோவின் பதிவேற்ற வேகம் 3.6 mbps ஆகவும் பதிவாகியுள்ளது. இதே ஏர்டெல்லின் பதிவேற்ற வேகம் 3.8 mbps ஆகவும் உள்ளது.

மை ஸ்பீடு செயலி மூலம் கணக்கீடு

மை ஸ்பீடு செயலி மூலம் கணக்கீடு

இந்த பதிவிறக்க வேகம் பல்வேறு பயன்பாடுகளில் இருந்து உள்ளடக்கத்தை அணுக உதவுகிறது. இந்த பதிவேற்ற வேகம மின்னஞ்சல், புகைப்படம், வீடியோ போன்ற சந்தாதாரகளால் உள்ளடக்கத்தை பகிர உதவுகிறது. இந்த வேகம் கணக்கீடானது மை ஸ்பீடு செயலி வாயிலாக பதிவிறக்க, பதிவேற்ற வேகத்தைக் கணக்கிட்டு இந்த அறிக்கையை டிராய் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance jio continued top spot in 4G download speeds

Again Reliance jio id lead in average 4G download speed ranking with 27.2 mbps speed, and bharti airtel average 4G download speed of 7.9 mbps.
Story first published: Friday, February 14, 2020, 14:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X