முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அடுத்தடுத்து தனது டெலிகாம் மற்றும் ரீடைல் துறை வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பல முயற்சிகள் எடுத்து வரும் நிலையில் டெலிகாம் துறையில் புதிய வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்கப் புதிய திட்டத்தைத் தீட்டியுள்ளார்.
டெலிகாம் கட்டணங்கள் குறித்துப் பெரிய அளவிலான விவாதம் நடந்து வரும் நிலையில் ஜியோ சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்து புதிய வர்த்தகத்திற்காகக் களத்தில் இறங்கியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ தனது மலிவான கட்டண சேவையின் மூலம் கோடி வாடிக்கையாளர்களை மட்டுமே பெற்றது மட்டும் அல்லாமல் போட்டி நிறுவனங்களில் இருந்து கணிசமான வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது.
இந்த வெற்றி வாய்ப்பை பயன்படுத்தி டெலிகாம் துறை வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளது.
ஜியோபோன்
ரிலையன்ஸ் ஜியோ 2ஜி வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் என்பதற்காக ஏற்கனவே பியூச்சர் போன்கள் பிரிவில் ஜியோ போன்களை அறிமுகம் செய்து அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற்றது. ஜியோ போன் அறிமுகம் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் மத்தியில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியது.
ஜியோ எக்ஸ்குளுசிவ்
இந்நிலையில் தற்போது ஜியோ ஸ்மார்ட்போன் விற்பனை மூலம் அதிகளவிலான வாடிக்கையாளர்களை அடைய வேண்டும் என்ற திட்டத்துடன் ஜியோ எக்ஸ்குளுசிவ் என்ற புதிய திட்டத்தின் கீழ் பல்வேறு சேவைகளுடன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
விவோ
இப்புதிய ஜியோ எக்ஸ்குளுசிவ் திட்டத்திற்கு ஜியோ நிறுவனம் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான விவோ உடன் கூட்டணி சேர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
சிறப்புச் சேவைகள்
ஜியோ - வீவோ கூட்டணியில் ஸ்மார்ட்போன்கள் வாங்குவோருக்குத் தள்ளுபடி விலையில், ஜியோ இணைப்பு உடன் OTT சேவை, ஷாப்பிங் சலுகைகள், ஒரு முறை ஸ்கிரீன் மாற்றப்படும் சேவை ஆகியவை கிடைக்கும்.
தற்போது இத்தகைய சேவைகள் விவோ நிறுவனத்தின் Y1S போன்களுக்குக் கிடைக்கிறது.
பிற நிறுவனங்கள்
ஜியோ விவோ நிறுவனத்துடன் மட்டும் அல்லாமல் லாவா, கார்பன் மற்றும் இதர சீன பிராண்டுகளுடனும் பேச்சு இத்தகைய திட்டத்தின் கீழ் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இக்கூட்டணியில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் 8000 ரூபாய் அளவீட்டில் இருக்கும் எனத் தெரிகிறது.
4ஜி போன்கள்
இதுமட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் இருக்கும் பல கோடி பியூச்சர் போன் வாடிக்கையாளர்களை 4ஜி சேவைக்கு மாற்ற வேண்டும் எனத் திட்டத்துடன் சீனாவின் ஐடெல் நிறுவனத்துடனான கூட்டணியில் 3,000 முதல் 4,000 ரூபாய் மதிப்பீட்டில் 4ஜி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யக் கூட்டணி அமைத்துள்ளது.
டெலிகாம் கட்டணம்
டெலிகாம் சேவை நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டு அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் 2021 முதல் புதிய கட்டணங்கள் அறிவிக்கப்பட்டு அமலாக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் யார் முதலில் கட்டணத்தை அறிவிக்கப்போகிறார்கள் என்பதில் தற்போது போட்டி அதிகரித்துள்ளது.
ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களின் முடிவிற்கு எவ்விதமான கருத்தையும் தெரிவிக்காத ஜியோ தனது நிலைப்பாட்டை என்னும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications