இந்தியாவில் 5ஜி சேவையைத் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் அடுத்தடுத்து அறிமுகம் செய்து வரும் நிலையில், சுமார் 80 நகரங்களில் தற்போது முழுமையான 5ஜி அறிமுகம் செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது.
4ஜி சேவையில் ரிலையன்ஸ் ஜியோ முன்னோடியாக இருக்கும் நிலையில், 5ஜி சேவையில் ஏர்டெல் ஆரம்பம் முதல் அலர்ட் ஆகவே உள்ளது. இந்த நிலையில் தான் முகேஷ் அம்பானி - ஆகாஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ அதிகாரப்பூர்வமாக 5ஜி சேவையைப் பயன்படுத்துவதற்கான கட்டணம் மற்றும் அதன் பயன்களை வெளியிட்டு உள்ளது.
இப்புதிய 5ஜி திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ தனது நாடு தழுவிய ரீசார்ஜ் திட்டத்தில் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் ஜியோ
இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தனது முதல் 5ஜி டேட்டா திட்டத்தை நாடு தழுவிய ரீசார்ஜ் பட்டியலில் இணைத்துள்ளது. Jio.com மற்றும் My Jio ஆப்-களில் மூலம் இனி இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநில ஜியோ வாடிக்கையாளர்களும் இந்த add-on data திட்டத்தை ரீசார்ஜ் செய்ய முடியும்.
61 ரூபாய் ஜியோ திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ தற்போது அறிமுகம் செய்துள்ள 61 ரூபாய் ஜியோ திட்டம் ஒரு கூடுதல் டேட்டா பேக் ஆகும். அதாவது ஒரு ஜியோ வாடிக்கையாளர் தங்கள் 5G ஸ்மார்ட்போன்களில் ஜியோ சிம் மூலம் 5G டேட்டாவை அனுபவிக்க நெட்வொர்க்-ஐ மேம்படுத்த மட்டுமே உதவுகிறது இந்த 61 ரூபாய் மதிப்பிலான add-on data திட்டம்.
5G அப்கிரேட் பிரிவு
புதிய ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் ஜியோ இணையதளம் மற்றும் MyJio ஆப்-ல் 5G அப்கிரேட் பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த 61 ரூபாய் ஜியோ 5ஜி டேட்டா திட்டத்துடன் 6 ஜிபி மொபைல் டேட்டாவை வழங்கப்படுகிறது ரிலையன்ஸ் ஜியோ.
ரீசார்ஜ் திட்டங்கள்
ஜியோ இணையதளத்தின்படி, இந்தத் திட்டம் பின்வரும் ப்ரீபெய்ட் திட்டங்களுக்குப் பொருந்தும் 119 ரூபாய், 149 ரூபாய், 179 ரூபாய், 199 ரூபாய் மற்றும் 209 ரூபாய். மேலும் 61 ரூபாய் திட்டத்திற்கு எவ்விதமான தனிப்பட்ட வேலிடிட்டி காலம் இல்லை, ஆனால் ஜியோ வாடிக்கையாளரின் ரீசார்ஜ் திட்டத்தின் அடிப்படையில் வேலிடிட்டி முடிவு செய்யப்படுகிறது.
ஜியோ ட்ரூ 5ஜி
மேலும் ஜியோ ட்ரூ 5ஜி அறிமுகப்படுத்தப்பட்ட நகரங்கள் மற்றும் ஜியோ வெல்கம் ஆஃபருக்கு அழைக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அன்லிமிடெட் 5ஜி டேட்டா பொருந்தும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
85 நகரங்கள்
ரிலையன்ஸ் ஜியோ தனது 5ஜி சேவைகளை மேலும் 10 நகரங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது, ஜியோவின் 5ஜி சேவைகளைக் கொண்ட மொத்த நகரங்களின் எண்ணிக்கையை 85 நகரங்களாக உயர்ந்து உள்ளது.
முக்கிய நகரங்கள்
தற்போது ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் ஆக்ரா, கான்பூர், மீரட், பிரயாக்ராஜ், திருப்பதி, நெல்லூர், கோழிக்கோடு, திருச்சூர், நாக்பூர் மற்றும் அகமத்நகர் ஆகிய 10 நகரங்களில் புதிதாக ஜியோ 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
1GBPS வேகம்
இந்த நகரங்களில், ஜியோ வாடிக்கையாளர்கள் 1GBPS வேகத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவைப் பயன்படுத்த முடியும், கூடுதல் கட்டணம் எதுவுமில்லை. தற்போது செய்துள்ள ரீசார்ஜ் திட்டத்துடன் 61 ரூபாய் Add-on பேக் ரீசார்ஜ் செய்தால் போதுமானது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications