டெல்லி : டெலிகாம் துறையில் தன்னுடைய ஜியோ சேவை மூலம் பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கும் முகேஷ் அம்பானி அடுத்த கட்டமாக பட்டன் போன்களிலும் பெரிய மாற்றத்தை கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக ஜியோ நிறுவனம் நவீன அம்சங்கள் கொண்ட பட்டன் போன்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகிறது.
ஜியோ பாரத் என்ற பெயரில் பல்வேறு அம்சங்கள் கொண்ட பட்டன் போன்கள் ரிலையன்ஸ் வெளியிட்ட வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2024 இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் ஜியோ பாரத்தின் V 3 மற்றும் V 4 மாடல் போன்களை அறிமுகம் செய்துள்ளது.

4ஜியில் இயங்கக்கூடிய இந்த போன்கள் லைவ் டிவி ,யூபிஐ அடிப்படையிலான டிஜிட்டல் பேமென்ட் மற்றும் ஜியோ டிவி, மற்றும் ஜியோ சினிமா ஆகிய வீடியோ ஸ்டிரீமிங் சேவைகள் உள்ளிட்ட நவீன அம்சங்களை கொண்டுள்ளன.
இந்த ஜியோபாரத்தின் V3 மற்றும் V4 மாடல் போன்களை அறிமுகம் செய்து பேசிய ஜியோ நிறுவனத்தின் தலைவரான சுனில்தத் 2023 ஆம் ஆண்டு ஜியோ பாரத் V2 மாடல் போன்களை அறிமுகம் செய்தோம். இது மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது, எனவேதான் சிறந்த விலைகொண்ட தரமான டிஜிட்டல் அனுபவங்களைத் தரும் போன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என முடிவு செய்தோம், அதன் அடிப்படையில் தான் ஜியோ பாரத் சீரிஸில் அடுத்தடுத்த மாடல்களை அறிமுகம் செய்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது புதிதாக ஜியோ பாரத் v3 மற்றும் ஜியோ பாரத் v4 மாடல் போன்களை அறிமுகம் செய்துள்ளது. இது அடுத்த தலைமுறைக்கான 4ஜி போன்களாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
மேலும் சாதாரணமாக பட்டன் போன்களை வைத்திருப்பவர்களும் ஸ்மார்ட் ஃபோன்களில் இருக்கும் வசதிகளை பெறலாம் என்ற நோக்கத்தில் இந்த போன்களில் புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜியோ பாரத் V3 மாடலை பொருத்தவரை முழுக்க முழுக்க ஸ்டைலில் அதிக கவனம் செலுத்தினார்களாம், V4 மாடலை பொருத்தவரை நவீன டிஜிட்டல் சேவைகளில் அதிக கவனம் செலுத்தியுள்ளார்களாம். இரண்டு போன்களுமே 10000mah பேட்டரி கொண்டுள்ளது.
இவற்றில் 128 ஜிபி வரை நீட்டிக்கப்பட்ட ஸ்டோரேஜ் அம்சம் இருக்கிறது. மேலும் 23 இந்திய மொழிகளில் இந்த போனை பயன்படுத்தலாம். இதன் ஒரு போனின் விலை 1099 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த போன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர ரீசார்ஜ் திட்டம் 123 ரூபாய் தான். இதன் மூலம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை பெற முடியும் மற்றும் 14 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த போன்களை ஜியோ மார்ட் மற்றும் அமேசான் தளங்களிலும் மற்றும் பிற செல்போன் விற்பனை கடைகளிலும் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications