இந்தியாவின் இணைய சப்ஸ்கிரைபர்களின் (Internet subscribers) எண்ணிக்கை, மார்ச் 2020 நிலவரப்படி 743.19 மில்லியனாக (74.31 கோடி) அதிகரித்து இருக்கிறது.
கடந்த மார்ச் 2019 நிலவரப்படி இது 636 மில்லியனாக (63.6 கோடி) இருந்தது. மார்ச் 2020 நிலவரப்படி 16.72 சதவிகிதம் பேர் புதிதாக இணைய சப்ஸ்கிரைபர்களாகி இருக்கிறார்கள்.
டிசம்பர் 2019 முதல் மார்ச் 2020 வரையான காலாண்டில், கணக்கு எடுத்துப் பார்த்தால் 3.4 சதவிகிதம் இணைய சப்ஸ்கிரைபர்கள் அதிகரித்து இருக்கிறார்கள். 718 மில்லியனாக இருந்த சப்ஸ்கிரைபர் எண்ணிக்கை இந்த மார்ச் 2020-ல் 743 மில்லியனாக அதிகரித்து இருக்கிறது என டிராய் சொல்கிறது.
தளபதியாக ரிலையன்ஸ் ஜியோ
இந்தியாவின் மொத்த இணைய சப்ஸ்கிரைபர்களில் மார்ச் 2020 நிலவரப் படி 52.26 சதவிகித சப்ஸ்கிரைபர்கள் (38.83 கோடி பேர்) ரிலையன்ஸ் ஜியோவில் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். செப்டம்பர் 2016-ல் பிரம்மாண்டமாக, பல்வேறு இலவசங்களோடு தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ, ஐந்து வருடத்துக்குள் இந்தியாவின் 52 சதவிகித இணைய சப்ஸ்கிரைபர்களை வாடிக்கையாளர்களை வளைத்து இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
போட்டி போடும் ஏர்டெல்
மார்ச் 2020 நிலவரப்படி, பார்தி ஏர்டெல் கம்பெனிக்கு, இந்தியாவின் மொத்த இணைய சப்ஸ்கிரைபர்களில் 23.64 சதவிகிதம் பேர் (17.56 கோடி பேர்) வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள் என டிராய் தரவுகள் சொல்கின்றன. ஒரு காலத்தில் இந்திய டெலிகாம் துறையின் தாதாவாக, அதிக சப்ஸ்கிரைபர்களை வைத்திருந்த ஏர்டெல், இன்று இணைய சப்ஸ்கிரைபர்கள் வியாபாரத்தை தக்க வைத்துக் கொள்ள ஜியோ உடன் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது.
தடுமாறும் விஐ (வொடாபோன் ஐடியா)
வொடாபோன் ஐடியா கம்பெனிக்கு, இப்போது ரிலையன்ஸ் ஜியோவின் மொத்த இணைய சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கையில், சுமாராக பாதி வாடிக்கையாளர்கள் கூட வொடாபோன ஐடியாவில் இல்லை. இந்தியாவின் மொத்த இணைய சப்ஸ்கிரைபர்களில் 18.77 சதவிகித இணைய சப்ஸ்கிரைபர்களுடன் (14 கோடி வாடிக்கையாளர்கள்) தடுமாறிக் கொண்டு இருக்கிறது விஐ.
மற்ற கம்பெனிகள்
இணைய சப்ஸ்கிரைபர்கள் சந்தையில், மத்திய அரசின் பி எஸ் என் எல் 4.16 சதவிகித சந்தையையும், எம் டி என் எல் 0.14 % சந்தையையும் வைத்து இருக்கிறார்களாம். இந்தியாவின் மொத்த இணைய சப்ஸ்கிரைபர்களில் 45.72 கோடி பேர் நகர் புறத்திலும், 28.59 கோடி பேர் கிராம புறங்களிலும் இருக்கிறார்கள் என்கிறது டிராய் தரவுகள்.


Click it and Unblock the Notifications