ரிலையன்ஸ் ஜியோ ஒரு புதிய டேட்டா பேக்கை வெறும் 11 ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தியது. இதில் தினசரி டேட்டா வரம்பை தீர்ந்துவிட்டால் அல்லது கூடுதல் டேட்டா தேவைப்படும் பயனர்களுக்கு 10ஜிபி 4ஜி டேட்டாவை வழங்குகிறது.
ரூ.11 ஜியோ டேட்டா பேக் விவரங்கள்:ஜியோவின் புதிய ரூ.11 டேட்டா வவுச்சர் 10 ஜிபி 4ஜி டேட்டாவை வழங்குகிறது. இது ரீசார்ஜ் செய்வதிலிருந்து ஒரு மணிநேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன்பிறகு அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும் ஆனால் மிகக் குறைந்த வேகத்தில் மட்டுமே இருக்கும். அதேபோல், இதில் வாய்ஸ் கால்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் கிடைக்காது. இணைய சேவைகள் மட்டுமே கிடைக்கும். இது ஏற்கனவே ஆக்டிவ் பிளானில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த குறைந்த விலை டேட்டா பேக்கை பயன்படுத்த முடியும்.

இது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்குக் கிடைக்கிறது.இது அனைத்து டேட்டா திட்டங்களைப் போலவே, MyJio ஆப் அல்லது இணையதளத்தைப் பயன்படுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். நீங்கள் ஆக்டிவ் பிளானில் இல்லை என்றால் இந்த திட்டம் வேலை செய்யாது.
தற்போது, இந்த புதிய 11 ரூபாய் பேக் ஏற்கனவே ஏர்டெல்லின் கிடைக்கும் நிலையில், இதுவே இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் உள்ள டேட்டா பேக்குகளில் ஒன்றாக இருந்ததது. தற்போது இது அதே விலையில் ஒரு மணிநேரத்திற்கு அதே 10 ஜிபி 4ஜி டேட்டாவை ஜியோ வழங்குகிறது. அதேபோல், வோடபோன் ஐடியாவின் மலிவான திட்டம் ரூ.23 ஆகும். மேலும் பயனர்களுக்கு ஒரு நாள் செல்லுபடியாகும் 1GB டேட்டாவை வழங்குகிறது.
மற்ற ஜியோ டேட்டா பிளான்கள்: ரூ.49: வரம்பற்ற 4G டேட்டாவை வழங்குகிறது. ஆனால் ஒரு நாள் மட்டுமே செல்லுபடியாகும்
ரூ. 5175: 10 OTT ஆப்ஸுடன் 10GB டேட்டாவை வழங்குகிறது. இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்
ரூ. 219: 30 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 30 நாட்களுக்கு செல்லுபடியாகும்
ரூ.359: 50ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது 30 நாட்களுக்கு செல்லுபடியாகும்
1ஜிபிக்கு ரூ.19ல் தொடங்கி 12ஜிபிக்கு ரூ.139 வரை பூஸ்டர் பேக்குகளையும் ஜியோ வழங்குகிறது. இவை ஒவ்வொன்றும் ஆக்டிவ் பிளான் வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.


Click it and Unblock the Notifications