டெல்லி: உலகம் முழுக்க கொரோனாவின் ருத்ர தாண்டவத்திற்கு பயந்து, பல நாடுகள் பல வகையான கட்டுப்பாடுகளை விதித்து வந்தாலும், இந்தியாவின் தொலைத் தொடர்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான ஜியோ அதன் கடமையை செப்பனே செய்து வருகிறது எனலாம்.
ஏற்கனவே தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சிக்கலில் தவித்து வந்தாலும், நாட்டில் நிலவி வரும் கொரோனா பிரச்சனைக்கு மத்தியில் பல சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன.
ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே சலுகைக்கென பிரத்யேகமான சலுகையை வழங்கி வரும் நிலையில், இந்த கொரோனா ரன களத்திலும் ஒரு சலுகையை வழங்கியுள்ளது.
ஜியோ ஒர்க் ஃப்ரம் ஹோம் சலுகை
அது மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி, மாறி மாறி பல பயணக் கட்டுப்பாடுகளை விதித்து உள்ள நிலையில், ஊழியர்களையும் வீட்டில் இருந்து பணிபுரிய அறுவுறுத்தியுள்ளன. இந்த நிலையில் வீட்டில் இருந்தே பணியாற்றும் நபர்களுக்காக, ரிலையன்ஸ் ஜியோ ஒர்க் ஃப்ரம் ஹோம் எனும் பிரத்யேகத் திட்டத்தினை அறிவித்துள்ளது.
மிக உபயோகமாக இருக்கும்
மேலும் இந்த திட்டத்தின் படி, வாடிகையாளர்கள் தினமும் 2 ஜிபி டேட்டாவினை பெற முடியும். இதன் வேலிடிட்டி 51 நாட்களாகும். எனினும் இந்த திட்டம் இணைய சேவையை மட்டுமே வழங்க முடியும். இந்த பேக்கில் காலிங் செய்தல் மற்றும் எஸ்எம்எஸ் போன்றவற்றினை பெற முடியாது. ஆனால் இண்டர்நெட் மட்டுமே பயன்படுத்த தேவை உள்ளவர்களுக்கு இந்த திட்டம் மிக உபயோகமாக இருக்கும். இது கொரோனா நெருக்கடியில் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய மிக உபயோகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இப்படியும் ஒரு சலுகை உண்டு
ஆக மொத்தத்தில் இந்த பேக் மூலம் இந்த திட்டத்தின் மூலம் 120 ஜிபி டேட்டாவினை பெற முடியும். இந்த திட்டத்தின் மூலம் அதிவேக முழு டேட்டாவையுகம் பயன்படுத்திய பிறகு, வாடிக்கையாளர்கள் நாள் முழுவதும் 64 kbps எனும் குறைந்த வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அதிரடியான ஏற்றம் கண்ட பங்கு விலை
ஜியோ நிறுவனம் சமீப காலமாக தனது டேட்டா வவுச்சர் திட்டங்களை கணிசமான அளவு மேம்படுத்தி வருகிறது. குறிப்பாக ரூ.11, ரூ.21, ரூ.51 மற்றும் ரூ.101 ஆகிய ப்ரிபெய்டு டேட்டா தரவுகளையும் வழங்கி வருகிறது. கொரானா வைரஸ் பரவுவதை தடுக்க பெரும்பாலானோர் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்படும் நிலையில் ஜியோ நிறுவனம் இந்த டேட்டா திட்டங்களை வாடிக்கையாளர்கள் நலனுக்காக அறிவித்துள்ளது மிக வரவேற்கதக்க விஷயமே,. இந்த நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலையானது 6.70% ஏற்றம் கண்டு 943.10 ஆக வர்த்தகமாகி வருகிறது.


Click it and Unblock the Notifications