”அனைவருக்கும் ஏஐ” முதல் ஜியோ ஐபிஓ வெளியீடு வரை.. மெகா திட்டத்துடன் களமிறங்கும் முகேஷ் அம்பானி !!

மும்பை: இந்தியாவிலேயே மிகப்பெரிய சந்தை மூலதன மதிப்பு கொண்ட நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இருக்கிறது. இதன் தலைவரான முகேஷ் அம்பானி நிறுவன ஆண்டு கூட்டத்தில் பங்கேற்று பேசினார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அடுத்த கட்ட பயணம் குறித்த பல்வேறு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார் .

முகேஷ் அம்பானி: ரிலையன்ஸ் நிறுவனம் எந்தெந்த துறைகளில் எல்லாம் கவனம் செலுத்தப் போகிறது, ரிலையன்ஸ் குழுமத்துக்கு உட்பட்ட நிறுவனங்களில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப் போகிறோம் என்பது குறித்து விரிவாக அவர் உரையாற்றினார். இந்த கூட்டத்தில் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.

”அனைவருக்கும் ஏஐ” முதல் ஜியோ ஐபிஓ வெளியீடு வரை.. மெகா திட்டத்துடன் களமிறங்கும் முகேஷ் அம்பானி !!

ஜியோ ஐபிஓ: ரிலையன்ஸ் ஜியோ ஐபிஓ 2026 ஆம் ஆண்டின் முதல் பாதிக்குள் வெளியிடும் என்ற நல்ல தகவலை அவர் வெளியிட்டு இருக்கிறார் . ஜியோ நிறுவனம் தன்னுடைய ஐபிஓவை வெளியீடு செய்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது என்பதை தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன், 2026 ஆம் ஆண்டின் முதல் பாதிக்குள் ரிலையன்ஸ் ஜியோ ஐபிஓ வெளியிட்டு சந்தையில் பட்டியலிடப்படும் என அறிவித்தார்.

பெரிய மதிப்பீடு கொண்ட ஐபிஓ: ஜியோ நிறுவனத்தின் ஐபிஓ வெளியீடு இந்திய பங்குச் சந்தையில் வெளியிடப்படும் மிகப்பெரிய ஒரு ஐபிஓ என்ற வரலாற்றை படைக்கும். ஜியோ நிறுவனத்தின் ஐபிஓ வெளியீடு என்பது கிட்டத்தட்ட 52,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஐபிஓ வெளியீடாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை இந்திய சந்தையில் வெளியிடப்பட்ட ஐபிஓக்களிலேயே ஹூண்டாய் இந்தியா நிறுவனம் வெளியிட்ட ஐபிஓவின் மதிப்பு 28 ஆயிரம் கோடி . தற்போது அதைவிட இரண்டு மடங்கு அதிகமான தொகையை ரிலையன்ஸ் ஜியோவின் ஐபிஓ மூலம் திரட்டப்பட இருக்கிறது.

அடுத்த ஆண்டில்: 2026 ஆம் ஆண்டில் இந்திய பங்குச் சந்தையின் மிகப்பெரிய ஒரு ஐபிஓ வெளியிட்டாகவும் அதிகமானவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கக்கூடிய ஒரு ஐபிஓவாகவும் இது இருக்கும். 2016 ஆம் ஆண்டில் இருந்து தான் இந்தியாவில் முதன்முறையாக ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு சேவையை வழங்க தொடங்கியது . படிப்படியாக வாடிக்கையாளர்களை ஈர்த்து தற்போது 500 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட ஒரு தொலைதொடர்பு சேவை நிறுவனம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

500 மில்லியன் வாடிக்கையாளர்:இந்தியாவின் நம்பர் ஒன் தொலைத்தொடர்பு சேவை நிறுவனமாக ஜியோ நிறுவனம் தொடர்ந்து தன்னுடைய இடத்தை தக்கவைத்துக் கொண்டு வருகிறது. உலகிலேயே அதிவேக 5ஜி சேவை வழங்கக்கூடிய ஒரு நிறுவனம் என்ற பெருமையும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு உண்டு. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்த கட்டமாக எங்கும் ஏஐ அனைவருக்கும் ஏஐ என்ற இலக்கை நோக்கி பயணம் செய்யப் போவதாக முகேஷ் அம்பானி அறிவித்திருக்கிறார்.

முதலீடு: கடந்த நிதியாண்டில் இந்நிறுவனம் 1.28 லட்சம் கோடி ரூபாயை வருமானமாக ஈட்டியிருக்கிறது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டால் பல்வேறு முதலீட்டு நிறுவனங்களும் கூட இந்த பங்குகளை வாங்குவதற்கு போட்டியிடும் என சொல்லப்படுகிறது. கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் கூட ஜியோவில் சுமார் 20 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக முதலீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

எங்கும் ஏஐ, அனைவருக்கும் ஏஐ: ரிலையன்ஸ் நிறுவனம் என்றாலே பெட்ரோ கெமிக்கல் என்ற நிலையிலிருந்து மாறி நவீன தொழில்நுட்பத்திலும் சாதனை படைக்கும் ஒரு நிறுவனமாக பெயர் பெற்றிருக்கிறது. ஜியோ நிறுவனத்திற்கு 5 இலக்குகளை நிர்ணயம் இருப்பதாக முகேஷ் அம்பானி கூறியுள்ளார். அனைத்து இந்தியர்களுக்கும் மொபைல் மற்றும் வீட்டு பிராட்பேண்ட் மூலம் இணைப்பை ஏற்படுத்துவது , அனைத்து வீடுகளுக்கும் டிஜிட்டல் ரீதியிலான இணைப்புகளையும் தீர்வுகளையும் வழங்குவது, அனைத்து தொழில்களுக்கும் பாதுகாப்பான டிஜிட்டல் கட்டமைப்பை வழங்குவது, எங்கும் ஏஐ அனைவருக்கும் ஏஐ என்ற இலக்கில் பயணம் செய்வது என முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+