வெற்றிக் கொடி கட்டும் ஜியோ! ரிவர்ஸ் கியரில் ஏர்டெல், வொடபோன் ஐடியா!

இன்று இந்தியாவில், பாட்டு கேட்பது தொடங்கி, பொழுது போகாமல் படம் பார்ப்பது வரை எல்லாமே ஆன்லைன் மயமானதற்கு முக்கிய காரணம் ஜியோ தான்.

இந்தியாவில் 2015-ம் ஆண்டு வாக்கில் ஒரு ஜிபி டேட்டாவுக்கு சுமாராக 150 ரூபாய் கொடுத்துக் கொண்டிருந்ததை நாம் மறந்திருக்கமாட்டோம்.

ஆனால் இப்போது 150 ரூபாயில், 24 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, நாள் ஒன்றுக்கு 100 எஸ் எம் எஸ், இலவச வாய்ஸ் கால் (மற்ற நெட்வொர்க்குகளுக்கு 300 நிமிடம் டாக் டைம்) எல்லாம் கொடுத்துக் கொண்டு இருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ.

சந்தையை பிடிக்கும் ஜியோ

சந்தையை பிடிக்கும் ஜியோ

அதே வேகத்தில் தற்போது, இந்தியாவின் டெலிகாம் வாடிக்கையாளர்களை, தன் பக்கம் இழுத்துக் கொண்டு இருக்கிறது. ஏற்கனவே, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ தான் இந்தியாவிலேயே அதிக வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் நிறுவனம். ஒட்டு மொத்த இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ 34.33 % டெலிகாம் சந்தையை வைத்திருக்கிறது.

மே 2020-ல் ஜியோ வாடிக்கையாளர்கள்

மே 2020-ல் ஜியோ வாடிக்கையாளர்கள்

சரி, அதான் இந்தியாவிலேயே நம்பர் 1 கம்பெனி ஆகிவிட்டார்களே, இனியாவது மற்ற கம்பெனிகளுக்கு எதையாவது விட்டு வைப்பார்களா என்றால் இல்லை. கடந்த மே 2020-ல் ரிலையன்ஸ் ஜியோவில் 36.57 லட்சம் வொயர்லெஸ் வாடிக்கையாளர்கள் புதிதாக இணைந்து இருக்கிறார்களாம்.

ஏர்டெல் & வொடாபோன்

ஏர்டெல் & வொடாபோன்

அதே மே 2020- ஏர்டெல் நிறுவனத்தில் இருந்து 47.42 லட்சம் வாடிக்கையாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள். அதே போல வொடாபோன் ஐடியா கம்பெனியில் இருந்து 47.26 லட்சம் வாடிக்கையாளர்கள் வெளியேறி இருக்கிறார்களாம். ஜியோ தன் வாடிக்கையாளர்களை அதிகரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், ஏர்டெல் & வொடபோன் தன் வாடிக்கையாளர்களை இழந்து கொண்டு இருக்கிறது.

பி எஸ் என் எல் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு

பி எஸ் என் எல் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு

அவ்வளவு ஏன், மத்திய அரசு நிறுவனமான பி எஸ் என் எல் கம்பெனி கூட, கடந்த மே 2020 கால கட்டத்தில் 2.01 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்று இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஜியோ வருகைக்குப் பின், தொடர்ந்து ஏர்டெல், வொடபோன் ஐடியா, வாடிக்கையாளர்களை இழந்து கொண்டே வருகிறது எனலாம்.

டெலிகாம் சந்தை நிலை

டெலிகாம் சந்தை நிலை

இந்திய டெலிகாம் சந்தையில் 34.3 சதவிகித வாடிக்கையாளர்களுடன் முகேஷ் அம்பானியின் ஜியோ முதல் இடத்தில் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து பார்தி ஏர்டெல் 27.7 % வாடிக்கையாளர்களுடன் இரண்டாவது இடத்திலும், 27.09 % சந்தை உடன் வொடபோன் ஐடியா 3-வது இடத்திலும், பி எஸ் என் எல் 10.5 % சந்தை உடன் 4-வது இடத்திலும் இருக்கின்றனவாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+