யூடியூபில் வீடியோ பார்ப்பது எல்லாம் பணக்காரர்களின் வேலை எனச் சொல்லிக் கொண்டிருந்த நாம், இன்று சாதாரணமாக பாட்டு கேட்பதைக் கூட யூடியூபில் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
அந்த அளவுக்கு நம் இந்தியர்களின் இணையப் பயன்பாடு, மிகவும் அதிகரித்துவிட்டது. அதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று ரிலையன்ஸ் ஜியோ.
ஆம் 2016-ம் ஆண்டு வரை, 30 நாளுக்கு 1 ஜிபி டேட்டாவை தங்கம் போல பார்த்து செலவழித்துக் கொண்டிருந்த நாம், ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்குப் பின் ஒரு நாளுக்கு 1 ஜிபி டேட்டா போதாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
டிஸ்னி ஹாட் ஸ்டார்
இப்போதும், ஜியோ தன் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், ஒரு புதிய இலவசத்தை களம் இறக்கத் தொடங்கி இருக்கிறது. அது தான் டிஸ்னி ஹாட் ஸ்டார். ஆம் ஜியோவில் சில ரீசார்ஜ் திட்டங்களை வாங்கினால் அதற்கு டிஸ்னி ஹாட் ஸ்டார் ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் செயலியில் 1 வருட சப்ஸ்கிரிப்ஷன் இலவசமாம்.
எப்படிப் பெறுவது
ரிலையன்ஸ் ஜியோவின் 4 ரீசார்ஜ் திட்டங்களை வாங்கினால் மட்டுமே இந்த டிஸ்னி ஹாட் ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்குமாம். அந்த 4 திட்டங்களில் ஏதாவது ஒரு திட்டத்தை ரீசார்ஜ் செய்த உடனேயே டிஸ்னி ஹாட் ஸ்டாரில், ரீசார்ஜ் செய்த ஜியோ எண்ணை வைத்து லாக் இன் செய்து கொள்ளலாமாம். டிஸ்னி ஹாட் ஸ்டாரில் இருந்து ஓடிபி வரும் அதை கொடுத்து லாக் இன் செய்து கொள்ளலாம்.
ஜியோ எண் முக்கியம்
அதான் டிஸ்னி ஹாட் ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் கிடைத்துவிட்டதே என ஜியோ எண்ணை தூக்கி எரிந்து விட முடியாது. ஜியோ எண்ணில் அடிப்படையான திட்டங்களையாவது ரீசார்ஜ் செய்து, ஆக்டிவ்வாக வைத்திருக்க வேண்டும். அப்படி ஜியோ எண் ஆக்டிவ்வாக இல்லை என்றால் டிஸ்னி சப்ஸ்கிரிப்ஷனும் நின்றுவிடுமாம்.
திட்டங்கள் என்ன 1
1. 401 ரூபாய் திட்டம் - 90 ஜிபி டேட்டா, 28 நாள் வேலிடிட்டி, அன்லிமிடெட் வாய்ஸ் கால்.
2. 2,599 ரூபாய் திட்டம் - இது ஒரு வருடாந்திர திட்டம். தினமும் 2 ஜிபி டேட்டா, 365 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்.
திட்டங்கள் என்ன 2
3. 612 ரூபாய் திட்டம் - இது ஒரு தனி ரீசார்ஜ் திட்டம் அல்ல. ஆனால் கூடுதல் டேட்டா & வாய்ஸ் கால் நிமிடங்களைக் கொடுக்கும் திட்டம். 72 ஜிபி டேட்டா, 6000 நிமிட ஜியோ - மற்ற நெட்வொர்க் வாய்ஸ் கால் நிமிடங்கள்.
4. 1,208 ரூபாய் திட்டம் - இதுவும் 612 ரூபாய் திட்டம் போல கூடுதல் டேட்டா கொடுக்கும் திட்டம். 240 ஜிபி அதி வேக டேட்டா மற்றும் 240 நாள் வேலிடிட்டி.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications