முகேஷ் அம்பானி காட்டில் பேய் மழை பெய்ந்து கொண்டு இருக்கிறது. முகேஷ் அம்பானி, வரும் மார்ச் 2021-க்குள், தன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியை, கடன் இல்லாத கம்பெனியாக மாற்றுவேன் எனச் சொல்லி இருந்தார்.
இது கொரோனா காலம். சொன்ன படி கடனை அடைக்க முடியுமா என்று எல்லாம் அம்பானி யோசிக்கவில்லை போல.
தன் Reliance jio நிறுவன, இப்ப சுட்ட சரவணபவன் இட்லி போல, பங்குகளை மட்டும் தொடர்ந்து விற்றுக் கொண்டே இருக்கிறார். இப்போது சில்வர் லேக் என்கிற கம்பெனி இரண்டாம் முறையாக ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்ய இருக்கிறதாம்.
சில்வர் லேக் 2
சில்வர் லேக் என்கிற கம்பெனி, ஏற்கனவே கடந்த மே 2020-ல் சுமாராக 5,655 கோடி ரூபாயை ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடுச் செய்து 1.15 % பங்குகளை வாங்கிக் கொண்டது. இப்போது மேலும் 4,546.8 கோடி ரூபாயை முதலீடு செய்து 0.93 % பங்குகளை வாங்க இருக்கிறதாம். சரி இது வரை எவ்வளவு பங்குகளை ரிலையன்ஸ் ஜியோ விற்று இருக்கிறது? எவ்வளவு பணத்தை திரட்டி இருக்கிறார் அம்பானி? வாருங்கள் பார்ப்போம்.
கடன் அளவு
முதலில் கடன் கணக்கில் இருந்து தொடங்குவோம். ரிலையன்ஸ் கம்பெனி சுமாராக 5.4 லட்சம் கோடி ரூபாயை, தன்னுடைய பல புதிய மற்றும் பழைய வியாபாரங்களில் முதலீடு செய்தது. அதிலும் குறிப்பாக ரூ. 3.5 லட்சம் கோடியை ரிலையன்ஸ் ஜியோவில் மட்டும் முதலீடு செய்தார்கள். மார்ச் 2020 கணக்குப் படி, ரிலையன்ஸின் மொத்த கடன் 3.36 லட்சம் கோடி ரூபாய். ரிலையன்ஸ் கையில் இருக்கும் பணம் 1.75 லட்சம் கோடி ரூபாய். ஆக மீதி இருக்கும் 1.61 லட்சம் கோடி ரூபாய் தான் நிகர கடன்.
மார்ச் 2021-க்குள் முடிப்பேன்
இந்த கடனைத் தான், மார்ச் 2021-க்குள், முகேஷ் அம்பானி முழுமையாக காலி செய்ய இவ்வளவு உழைத்துக் கொண்டு இருக்கிறார். சரி இந்த 1.61 லட்சம் கோடியில் எவ்வளவு ரூபாய் இதுவரை திரட்டி இருக்கிறார்..? இதோ பட்டியல்.
யார் ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்து இருக்கிறார்கள்
1. ரிலையன்ஸ் ஜியோவின் 9.9 % பங்குகளை, ஃபேஸ்புக் நிறுவனம் 43,574 கோடி ரூபாயைக் கொட்டிக் கொடுத்து வாங்கிக் கொண்டது. 2. சில்வர் லேக் என்கிற நிறுவனமும் 5,655 கோடி ரூபாயை ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்தது.
3. விஸ்டா ஈக்விட்டி என்கிற கம்பெனி, ரிலையன்ஸ் ஜியோவில் 11,367 கோடி ரூபாயை முதலீடு செய்தது.
4. ஜெனரல் அட்லாண்டிக் என்கிற நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோவில் சுமாராக 6,600 கோடி ரூபாய் முதலீடு செய்து இருக்கிறது.
5. முபதாலா கம்பெனி 9,093 கோடி ரூபாயை ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்தது.
6. சில்வர் லேக்கின் இரண்டாவது முதலீடு 4,547 கோடி ரூபாய்.
ஆக மொத்தம் 80,836 கோடி ரூபாயை திரட்டிவிட்டார்.
கிடப்பில் இருக்கும் டீல்கள்
இந்த டீல்களுக்கு முன்பே சவுதி அராம்கோ நிறுவனத்திடம் oil to chemical பிரிவின் 20 % பங்குகளை விற்க பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த டீல் முடிந்தால் ரிலையன்ஸுக்கு சுமாராக 1.12 லட்சம் கோடி ரூபாய் கைக்கு வருமாம். கொரோனாவால் இந்த திட்டம் நடைமுறைப்படுத்துவதில் தாமதமாகிக் கொண்டு இருக்கிறதாம்.
எரிபொருள் சில்லறை வணிகம்
இது போக ரிலையன்ஸ் எரிபொருள் சில்லறை வியாபாரத்தில், ஒரு கணிசமான பங்கை BP Plc என்கிற கம்பெனிக்கு விற்பதால் மட்டும் சுமாராக 7,000 கோடி ரூபாய் வரை வர இருக்கிறதாம். அது போக சமீபத்தில் வெளியான உரிமைப் பங்குகள் வழியாக அசால்டாக 53,125 கோடி ரூபாயை திரட்டி விடுவார்கள்.
பிரமாதம்
போகிற போக்கைப் பார்த்தால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு இருக்கும் ஒட்டு மொத்த கடனையும், முகேஷ் அம்பானி அடைத்துவிடுவார் போலிருக்கிறதே. நல்லது தான், இந்தியாவில் ஒரு சில தொழில் குழுமங்கள் மற்றும் நிறுவனங்களாவது, கடன் பிரச்சனை இல்லாத நல்ல நிறுவனங்களாக வளரட்டும். அம்பானியின் இந்த பெரு முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
More From GoodReturns

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?



Click it and Unblock the Notifications