ஜியோவின் புதிய திட்டங்கள் அறிமுகம்.. என்னென்ன சலுகைகள்.. யாருக்கெல்லாம் பயன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜியோவின் வருக்கைக்கு பிறகு, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து பல சலுகைகளை அறிவித்து வருகின்றன.

அதுவும் லாபத்தினை மறந்து பல சலுகைகளை அறிவித்து வருகின்றன. எனினும் ஜியோவுக்கு ஈடாக தங்களது சலுகைகளை மற்ற நிறுவனங்கள் கொடுக்க முடியவில்லை என்பதே உண்மை.

அதோடு வாடிக்கையாளர்களை தங்களுடன் தக்க வைத்துக் கொள்ள, அவ்வப்போது தொடர்ந்து ஜியோ நிறுவனம் பல புதிய திட்டங்களையும் அறிவித்து வருகின்றது.

மீண்டும் மீண்டும் புதிய உச்சம் தொடும் சென்செக்ஸ்.. நிஃப்டி 17,200-க்கு அருகில் வர்த்தகம்..! மீண்டும் மீண்டும் புதிய உச்சம் தொடும் சென்செக்ஸ்.. நிஃப்டி 17,200-க்கு அருகில் வர்த்தகம்..!

5 புதிய திட்டங்கள்

5 புதிய திட்டங்கள்

ஜியோ நிறுவனம் தற்போது டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் உள்ளிட்ட அமசங்களுடன் 5 திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டங்கள் 499 ரூபாயில் ஆரம்பித்து 2,599 ரூபாய் வரையிலும் உள்ளது. இந்த திட்டங்களில் 4ஜி வேகம் கொண்ட 3ஜிபி டேட்டவானது கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இதனுடன் வாய்ஸ் கால் சேவையும், இலவச SMS சேவையும் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

ரூ.499 மதிப்பிலான திட்டம்

ரூ.499 மதிப்பிலான திட்டம்

இன்று அறிமுகம் செய்துள்ள இந்த 5 திட்டங்களும், இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
இதில் 499 ரூபாய் மதிப்பிலான திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா கிடைக்கும். இதன் வேலிடிட்டி 28 நாட்களாகும். இது தவிர இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவை மற்றும் தினசரி 100 இலவச எஸ்.எம்.எஸ் உள்ளிட்டவையும் கிடைக்கும். இதில் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் இன்னும் சில சலுகைகளும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.2,599 மதிப்பிலான திட்டம்

ரூ.2,599 மதிப்பிலான திட்டம்

ஜியோவில் இந்த ரூ.2,599 மதிப்பிலான ப்ரீபெய்டு திட்டத்தில், வாடிக்கையாளர்கள் தினசரி 2 ஜிபி டேட்டாவினை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மொத்தம் 740 ஜிபி டேட்டாவினை பெற்றுக் கொள்ளலாம். இதன் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இந்த திட்டத்திலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவை மற்றும் தினசரி 100 இலவச எஸ்.எம்.எஸ் உள்ளிட்டவையும் கிடைக்கும். இதில் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் இன்னும் சில சலுகைகளும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் உள்ளிட்ட அமசங்களும் கிடைக்கும்.

ரூ.666 மதிப்பிலான திட்டம்

ரூ.666 மதிப்பிலான திட்டம்

ஜியோவின் இந்த ரூ.666 மதிப்பிலான திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டியை கொண்டது. இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டாவானது கிடைக்கும். இதனுடன் வாய்ஸ் கால் சேவை, எஸ்.எஸ்.எம் சேவையும் கிடைக்கும். இது தவிர இதனுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் உள்ளிட்ட அமசங்களும், ஜியோடிவி, ஜியோ சினிமா மற்றும் இன்னும் சில சலுகைகளும் கிடைக்கும்.

ரூ.888 மதிப்பிலான திட்டம்

ரூ.888 மதிப்பிலான திட்டம்

ரூ.888 மதிப்பிலான திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வீதம், 84 நாட்களுக்கு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவை மற்றும் 100 இலவச எஸ்.எம்.எஸ் சேவை, இதனுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் உள்ளிட்ட அமசங்களும், ஜியோடிவி, ஜியோ சினிமா மற்றும் இன்னும் சில சலுகைகளும் கிடைக்கும்.

டிஸ்னி + ஹாட்ஸ்டார் திட்டங்கள்

டிஸ்னி + ஹாட்ஸ்டார் திட்டங்கள்

499 ரூபாய் மதிப்பிலான ஒரு வருட மொபைல் திட்டத்தில் 720p தரமான வீடியோக்களை பெற முடியும். இதனை டிவி அல்லது லேப்டாப் இணைக்க முடியாது. இது விளம்பரங்கள் வரும்.
இதே சூப்பர் திட்டத்தில் வருடத்திற்கு 899 ரூபாய் கட்டணமாகும். இதில் 1080p தரமான வீடியோக்களை பெற முடியும். இதனை டிவி அல்லது லேப்டாப்லும் இணைக்க முடியும். இதில் 2 இணைப்புகளை பெற்றுக் கொள்ளலாம்.

ஜியோவின் ப்ரீமியம் திட்டம்

ஜியோவின் ப்ரீமியம் திட்டம்

இதே ப்ரீமியம் திட்டத்தில் 1499 ரூபாய் வருட கட்டணமாகும். இந்த திட்டத்தில் 4 இணைப்புகளை பெற்றுக் கொள்ள முடியும். இதில் வீடியோவின் தரமானது 4K அளவுக்கு இருக்கும். இதிலும் டிவி அல்லது லேப்டாப்லும் இணைக்க முடியும். இதில் விளையாட்டு தவிர மற்ற விளம்பரங்கள் இருக்காது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance jio launched new 5 plans with free Disney + hotstar mobile subscription

Jio latest updates.. Reliance jio launched new 5 plans with free Disney + hotstar mobile subscription
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X