ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரராக திகழும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், பல்வேறு வகையான சலுகைகளை வாரி வழங்கி வருகின்றது.
தற்போது 598 ரூபாய்க்கான புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய திட்டத்தில் அதிரடியான பல சலுகைகளையும் வழங்கியுள்ளது. சரி வாருங்கள் அப்படி என்னென்ன சலுகைகளை வழங்கி வருகிறது, வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
ரூ.598 ரூபாய்க்கான திட்டம்
ஜியோவின் இந்த 598 ரூபாய் மதிப்பிலான பேக்கானது 56 நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தினசரி 2 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. ஜியோ - ஜியோ வரம்பற்ற கால்களும், ஜியோ - மற்ற நெட்வொர்க்குகளுக்கு 2000 நிமிடங்களும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் தினசரி 100 எஸ் எம் எஸ்களும் வழங்குகின்றது. அதோடு ஒரு வருடத்திற்கான டிஸ்னி+ஹாட்ஸ்டார் விஐபி மெமர்ஷிப்பையும் வழங்குகிறது. இதன் மதிப்பு 399 ரூபாயாகும்.
பல வாடிக்கையாளர்களை ஈர்க்கலாம்
ஜியோவின் இந்த அதிரடியான சலுகையானது ஐபிஎல் போட்டிகள் நெருங்கி வரும் இந்த நேரத்தில் வந்துள்ளது. இதனால் இந்த திட்டமானது பல பயனர்களை ஈர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் விஐபி உறுப்பினர்கள் ஐபிஎல் போட்டிகளை இலவசமாக பார்த்துக் கொள்ளலாம்.
ரூ.499 திட்டம்
இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவினை வழங்குகிறது. அதோடு 399 ரூபாய் மதிப்பிலான ஒரு வருடத்திற்கான டிஸ்னி+ஹாட்ஸ்டார் விஐபி மெமர்ஷிப்பை வழங்குகிறது. எனினும் இந்த திட்டத்தில் காலிங் மற்றும் எஸ்எம்எஸ் வசதிகள் இல்லை. இந்த திட்டமானது 56 நாட்கள் வேலிடிட்டியைக் கொண்டுள்ளது.
ரூ.777 திட்டம்
இந்த திட்டமானது 84 நாட்கள் வேலிடிட்டியைக் கொண்டது. இதில் தினசரி 1.5 ஜிபி டேட்டாவினை வழங்குகின்றது. ஜியோ - ஜியோ வரம்பற்ற கால்களும், ஜியோ - மற்ற நெட்வொர்க்குகளுக்கு 3000 நிமிடங்களும் இலவசமாக வழங்கப்படுகிறது. தினசரி 100 எஸ்எம்எஸ்-களும் வழங்குகின்றது. இவற்றோடு 399 ரூபாய் மதிப்பிலான ஒரு வருடத்திற்கான டிஸ்னி+ஹாட்ஸ்டார் விஐபி மெமர்ஷிப்பை வழங்குகிறது.
ரூ.401 திட்டம்
ஜியோவின் 401 ரூபாய் திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதில் ஜியோ - ஜியோ வரம்பற்ற அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 1000 நிமிடங்களும் வழங்கப்படுகின்றது. ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்-களையும் வழங்குகின்றது. இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இவற்றோடு ஒரு வருடத்திற்கான டிஸ்னி+ஹாட்ஸ்டார் விஐபி மெமர்ஷிப்பையும் இலவசமாக வழங்குகிறது.
ரூ.2599 திட்டம்
ஒரு வருடத்திற்குண்டான இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதோடு இந்த திட்டத்தில் ஜியோ - ஜியோ அன்லிமிடெட் கால்கள், ஜியோ - மற்ற நெட்வொர்க்குகளுக்கு 12,000 இலவச நிமிடங்களும் வழங்கப்படுகிறது. இதோடு ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்-களும், இவற்றோரு வருடத்திற்கான டிஸ்னி+ஹாட்ஸ்டார் விஐபி மெமர்ஷிப்பையும் இலவசமாக வழங்குகிறது.


Click it and Unblock the Notifications