இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ அறிமுகமான பிறகு பல மாற்றங்களை எதிர்கொண்ட நிலையில் கடந்த சில மாதங்களாக நிலையான வர்த்தகம் மற்றும் வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.
ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா டெலிகாம் சேவை கட்டணங்களை உயர்த்துவதில் குறியாய் இருக்கும் நிலையில் ஜியோ முக்கியமான மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
28 நாள் ரீசார்ஜ்
பொதுவாக ப்ரீபெய்டு டெலிகாம் சேவையில் அனைத்து பேக்குகளுமே 28 நாள் அடிப்படையில் தான் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. மாதத்தில் 30 அல்லது 31 நாட்கள் இருக்கும் நிலையில் டெலிகாம் நிறுவனங்கள் 28 நாட்களுக்கு மட்டுமே சேவை திட்டத்தை அறிமுகம் காலம்காலமாகச் செய்து வருகின்றனர்.
இதை உடைக்கும் வகையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ காலண்டர் மாத அடிப்படையில் இயங்கும் ரூ.259 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ப்ரீபெய்ட் பயனர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு ரீசார்ஜ் செய்ய வேண்டிய தேதியை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள முடியும். முதல் முறையாக ரிலையன்ஸ் ஜியோ தான் 'காலண்டர் மாத' அடிப்படையில் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒரு மாதம் ரீசார்ஜ்
இந்த 259 ரூபாய் திட்டத்தின் படி 30 அல்லது 31ஆம் தேதி போன்ற எவ்விதமான கட்டுப்பாடும் இல்லாமல் ஒரு மாதம் என்ற அடிப்படையில் இயங்கும் அதாவது மார்ச் 29ஆம் தேதி ரீசார்ஜ் செய்தால் ஏப்ரல் 29ஆம் தேதி மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் எப்போது ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்ற பிரச்சனை இல்லை, அதேபோல் சம்பளம் வரும் நாளில் திட்டமிட்டு ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும்.
259 ரூபாய் திட்டம்
ஜியோவின் இப்புதிய 259 ரூபாய் திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி இண்டர்நெட் டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவை அளிக்கப்படுகிறது. மேலும் இத்திட்டத்தின் மூலம் வருடத்திற்கு 12 ரீசார்ஜ் மட்டுமே ஆனால் 28 நாள் கொண்ட திட்டத்தில் கட்டாயம் 13வது முறை ரீசார்ஜ் செய்ய வேண்டி நிலை உருவாகும்.
ஜியோ, ஏர்டெல்
ரிலையன்ஸ் ஜியோ-வின் இத்தகைய சேவை வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் நிலையில், விரைவில் ஏர்டெல் நிறுவனமும் இதேபோன்ற திட்டத்தை அறிவிக்கும். ஆனால் இதுநாள் வரையில் 28 நாள் ரீசார்ஜ் திட்டம் மட்டுமே அளித்து மக்களிடம் டெலிகாம் நிறுவனங்கள் அதிகப்படியான லாபத்தைப் பார்த்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications