ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஜியோ டேக்ஏர் (JioTag Air) ஒரு புதிய கேஜெட்டை அறிமுகம் செய்துள்ளது. கடந்தாண்டு ஜியோ அறிமுகம் செய்த ஜியோ டேக்-இன் அடுத்த கட்ட பதிப்பாக நவீன அம்சங்களுடன் ஜியோ டேக் ஏர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை ஐபோன் பயன்படுத்துபவர்களும் இனி பயன்படுத்தலாம் என ஜியோ அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த ஜியோ டேக் என்ற டிராக்கிங் டிவைஸ் ஜியோ திங்க்ஸ் செயலில்(Jio Things app) மட்டுமே இணைந்து செயல்படக்கூடியதாக இருந்தது ஆனால் ஜியோ டேக் ஏர் ஆப்பிள் ஃபைண்ட் மை (apple find my) அம்சத்துடனும் இணைந்து செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. உங்களது சாவி, ஐடி கார்டுகள் ,வாலட்டுகள், பர்ஸூகள், லக்கேஜ், உள்ளிட்டவை இருக்கும் இடத்தை துல்லியமாக கண்டறிந்து காட்டும் ஒரு கருவி இது.

இது ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களுடன் வேலை செய்கிறது, இனி ஜியோ டேக் ஏர் , ஐஓஎஸ் 14 மற்றும் அதற்கு மேல் பதிப்புகள் கொண்ட ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு 9 கொண்ட கருவிகளில் இணைந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வயர்லெஸ் டிவைஸ் ட்ராக்கிங் வசதிக்காக ப்ளூடூத் 5.3 பதிப்பு கொண்டுள்ளது. இந்த கருவிலேயே ஒரு இன்பில்ட் ஸ்பீக்கரும் பொருத்தப்பட்டுள்ளது. எனவே உங்களின் காணாமல் போன பொருட்களை கண்டுபிடிக்க இது மிக சத்தமான ஒலியை எழுப்புமாம்.
வாடிக்கையாளர் ஜியோ டேக் ஏரை, ஜியோ திங்க்ஸ் ஆப் (jio thinks app) மற்றும் ஆப்பிள் பைண்ட் மை (apple find my ) ஆகிய இரண்டு செயலிகளிலும் பயன்படுத்தலாம். ஆனால் ஒரு சமயத்தில் ஒரு செயலியில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
ஆன்ட்ராய்டு பயனாளர்கள் ஜியோ திங்க்ஸ் ஆப் என்ற செயலியுடன் இந்த கருவியை இணைத்துக் கொள்ளலாம். ஆப்பிள் பயன்பாட்டாளர்கள் ஆப்பிள் பைண்ட் மை செயலி மூலம் ஜியோ டேக் ஏரை ப்ளூடூத் வழியாக இணைத்து உங்களது பொருட்களை கண்டறிந்து கொள்ளலாம்.
ஜியோ டேக் ஏரை பொறுத்தவரை ரிலையன்ஸ் ஜியோ இணையதளத்தில் எம்.ஆர்.பி 2999 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனை 1499 ரூபாய்க்கு வாங்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. சிவப்பு மற்றும் சாம்பல் நிறங்களில் இந்த கருவியானது கிடைக்கிறது.
குறிப்பிட்ட சில வங்கிகளின் கிரெடிட் கார்டுகள் மற்றும் பேடிஎம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தினால் இதில் உங்களுக்கு கேஷ் பேக் உள்ளிட்ட ஆஃபர்களும் கிடைக்கும். ஜியோமார்ட், ரிலையன் டிஜிட்டல், அமேசான் ஆகிய தளங்கள் வாயிலாகவும் வாங்கிக் கொள்ளலாம்.
story written by: Devika


Click it and Unblock the Notifications