ஜியோ வைஃபை காலிங் வசதி அறிமுகம்
சென்னை: ஜியோ மொபைல் போன் சேவை நிறுவனம், wi-fi மூலமாக வாய்ஸ் மற்றும் வீடியோ கால் செய்யக் கூடிய வசதியை சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் அறிமுகம் செய்துள்ளது.
ஜியோ செல்போன் நெட்வொர்க்கை பயன்படுத்தக் கூடிய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த சேவை பொருந்தும், இதற்காக கூடுதலாக கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது.
சமீபத்தில், போட்டியாளரான ஏர்டெல் நிறுவனம் இதுபோன்ற சேவையை அறிமுகம் செய்தது. ஆனால் அதில் சில நிபந்தனைகள் உண்டு. ஜியோவில் அது இல்லை.
ஏர்டெல் நிபந்தனை
அதாவது, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் wi-fi நெட்வொர்க்கை பயன்படுத்தி மட்டும்தான் இதுபோன்ற அழைப்புகளை மேற்கொள்ள முடியும். அதே நேரம் ஜியோ அறிமுகம் செய்துள்ள இந்த திட்டத்தின்படி எந்த ஒரு வைஃபை நிறுவனத்தின் வை-பை நெட்வொர்க்கையும் பயன்படுத்தி இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ள முடியும். பொது இடங்களில் வழங்கப்படக் கூடிய wi-fi நெட்வொர்க்கை கூட பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஜியோ சலுகை
சராசரியாக ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு மாதம் 900 நிமிடங்கள் இலவச அழைப்புகளை கொடுக்கிறது. அதேநேரம் இதுபோன்ற wi-fi நெட்வொர்க்கை பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ளும் போது, இதை நாம் மிச்சப்படுத்த முடியும். செல்போன் நெட்வொர்க் வலிமை குறைவான இடங்களிலும் அவசர தேவைகளுக்கு இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஜியோ எண்ணிலிருந்து வைஃபை அழைப்பை எவ்வாறு செய்வது?
* உங்கள் செல்போனில் வைஃபை அழைப்பு ஆப்ஷன் இருப்பது அவசியம். எந்த மாதிரி ஹெட்செட்கள் இந்த வசதி கொண்டவை என்பதை ஜியோ வெப்சைட்டில் அறியலாம்
* தொலைபேசி செட்டிங்கிற்கு செல்லவும்
* வைஃபை அழைப்பு ஆப்ஷனைத் தேடுங்கள்
* வைஃபை அழைப்பு ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்
* நீங்கள் VoLTE மற்றும் Wi-Fi அழைப்பு இரண்டையும் சுவிட்ச் ஆன் செய்த நிலையிலேயே வைக்க வேண்டும்.
* வழக்கமாக தொலைபேசி அழைப்பை மேற்கொள்வது போலவே, இப்போதும் நீங்கள் போன் செய்யலாம்
* சிறந்த தரமான அழைப்புக்கு உங்கள் தொலைபேசி வைஃபை மற்றும் செல்லுலார் நெட்வொர்க்கிற்கு இடையில் தானாகவே மாறிக்கொள்ளும். நீங்கள் எதுவும் செய்ய தேவையில்லை
ஜியோ வைஃபை அழைப்பின் கட்டணங்கள் என்ன?
ஜியோவின் அறிவிப்புப்படி, அழைப்பு வசதி இலவசம். இது நீங்கள் ஏற்கனவே, இருக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய எண்களுக்கான எந்தவொரு அழைப்பும் இலவசம், ஆனால் சர்வதேச எண்களுக்கான அழைப்புகள் சர்வதேச அழைப்புகளுக்கான கட்டணங்களின்படி வசூலிக்கப்படும். ரோமிங்கின் போதும் நீங்கள் வைஃபை அழைப்பை மேற்கொள்ளலாம்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications