ரிலையன்ஸ் ஜியோ: 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ரூ.80,000 கோடி கொட்டுகிறதாம்..?!

இந்தியாவில் 5ஜி அலைகற்றைக்கான ஏலம் தொடங்கியுள்ள நிலையில் அதில் ரிலையன்ஸ் ஜியோ, அதானி உள்ளிட்ட 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் தொழில் நுட்பத் வளர்ச்சியின் மத்தியில், 4ஜி சேவையே வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் தான் அரசு 5ஜி சேவைக்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.

5ஜி ஏலம்

5ஜி ஏலம்

வருகின்ற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட 13 நகரங்களில், 5ஜி சேவையானது பயன்பாட்டுக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் 5ஜி சேவைக்கான அலைகற்றை ஏலம் தொடங்கியுள்ளது. இந்த ஏலமானது 4.30 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு பிரிவுகளாக 73 ஜிகா ஹெர்ட்ஸ் அலைவரிசைக்கான ஏலம் நடை பெற்று வருகிறது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, அதானி குழுமம் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

ஜியோவின் முதல் நாள் செலவு

ஜியோவின் முதல் நாள் செலவு

டெலிகாம் துறையில் முன்னணியில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ , முதல் நாள் 5ஜி அலைக்கற்றை ஏலத்தில், முதல் நாளிலேயே ஜியோவின் மதிப்பிடப்பட்ட செலவுகள் 80,000 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மிட்பேண்ட் தவிர(3.3) 700 மெகா ஹெர்ட்ஸ் அலைகற்றையையும் வாங்கியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பங்கு விலை நிலவரம்?

பங்கு விலை நிலவரம்?

இதற்கிடையில் இரண்டாவது நாள் ஏலத்தில் இன்னும் வாங்கியிருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இதற்கிடையில் பார்தி ஏர்டெல் பங்கின் விலையானது இன்று என் எஸ் இ-ல் 1.34% குறைந்து, 674.90 ருபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதே ஜியோவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது சற்று குறைந்து, 2419 ரூபாயாக முடிவடைந்துள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது சற்று குறைந்து, 2548.70 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ஏர்டெல் & வோடபோன்

ஏர்டெல் & வோடபோன்

இதே பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோனின் செலவுகள் முறையே 45,000 கோடி ரூபாய் மற்றும் 18,400 கோடி ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை விலை உயர்ந்த மெகா ஹெர்ட்ஸ் பேண்டை தவிர்த்து, மிட் பேண்ட் மற்றும் ஹை பேண்ட் 5ஜி ஏர்வேவ்ஸ் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.

அதானி குழுமம்

அதானி குழுமம்

இதே அதானி குழுமம் 1800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெஹா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ் போன்ற உயர்தர பேண்டுகளை தேர்தெடுத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ஏலத்திற்கு பின்பு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகினால் மட்டுமே தெரியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+