Jio Cricket: ஜியோவின் அதிரடி திட்டங்கள் + சூப்பர் சலுகைகள்!

இந்தியாவில் அதிக டெலிகாம் வாடிக்கையாளர்களைக் கொண்ட கம்பெனியாக வலம் வந்து கொண்டிருக்கும் ரிலையன்ஸ் ஜியோ, இப்போது கிரிக்கெட் ரசிகர்களுக்கு தீனி போடும் விதத்தில் சில விஷயங்களை களம் இறக்கி இருக்கிறது.

அதில் முதல் விஷயம் 4 பிரமாதமான ரீசார்ஜ் திட்டங்கள். இந்த ரீசார்ஜ் திட்டங்களிலேயே கிரிக்கெட் ரசிகர்களை சுண்டி இழுக்கும் சலுகைகளை வைத்திருக்கிறார்கள்.

அதோடு ஜியோ கிரிக்கெட் என்கிற பெயரிலும் போட்டியில் பங்கேற்று பரிசுகளை வெல்லும் சலுகையை அறிவித்து இருக்கிறார்கள். அந்த 4 ரிசார்ஜ் திட்டங்கள் + இந்த ஜியோ கிரிக்கெட் சலுகைகளை இங்கு விரிவாகப் பார்ப்போம். முதலில் ஜியோ கிரிக்கெட் சலுகையில் இருந்து தொடங்குவோம்.

ஜியோ கிரிக்கெட் (Jio Cricket Play along)

ஜியோ கிரிக்கெட் (Jio Cricket Play along)

ரிலையன்ஸ் ஜியோ ஐபிஎல் ரசிகர்களுக்காக ஜியோ கிரிக்கெட் (Jio Cricket) என்கிற சலுகையைக் களம் இறக்கி இருக்கிறது. இந்த ஜியோ கிரிக்கெட்டில், ரசிகர்கள், தங்களின் கிரிக்கெட் திறனைப் பயன்படுத்தி, ஒவ்வொரு பந்தையும் விளையாடலாம். சரியாகக் கணித்துக் சொல்பவர்களுக்கு பரிசுகள் கொடுக்கப்படும் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் வலைதளத்தில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

போட்டிக்கு முந்தைய க்விஸ், போல்

போட்டிக்கு முந்தைய க்விஸ், போல்

ஐபிஎல் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்பே, கேள்வி பதில்கள், போல் (Poll), க்விஸ் (Quizz) என ஏகப்பட்ட விஷயங்கள் ஜியோ கிரிக்கெட்டில் இருக்கிறதாம். இதிலும் ஐபிஎல் ரசிகர்கள் பங்கெடுத்துக் கொள்ளலாமாம். ரிலையன்ஸ் ஜியோ, ஸ்டிக்கர் சாட்டையும் (Sticker Chat) அறிமுகப்படுத்தி இருக்கிறதாம்.

தினமும் பரிசு

தினமும் பரிசு

தினமும் ஐபிஎல் ரசிகர்கள், ஜியோ கிரிக்கெட், அவர்களுக்கு கொடுக்கும் Daily Challenge-களை நிறைவு செய்து, தினமும் பரிசுகளைப் பெறலாம். Daily Challenges பிரிவின் கீழ், பம்பர் பரிசு என ஒரு டைல் இருக்குமாம். அதை க்ளிக் செய்து, போட்டிகளில் பங்கேற்று, பல்வேறு பரிசுகளை வெல்லலாம் என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ்.

யார் எல்லாம் பயன்படுத்தலாம்

யார் எல்லாம் பயன்படுத்தலாம்

My Jio செயலியை வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும், JioEngage என்கிற பிரிவின் கீழ் சென்று, ஜியொ கிரிக்கெட்டில் கலந்து கொள்ளலாம். ஜியோ வாடிக்கையாளர்களாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தோ அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்தோ, மை ஜியோ அப்ளிகேஷனை பதிவிரக்கம் செய்து பங்கேற்கலாம். சரி இப்போது ஜியோ கிரிக்கெட்டின் கீழ் குறிப்பிட்டு இருக்கும், ரீசார்ஜ் திட்டங்களைப் பார்ப்போம்.

598 ரூபாயில் சரவெடி

598 ரூபாயில் சரவெடி

வேலிடிட்டி 56 நாட்கள்
நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா
ஜியோ டு ஜியோ அன்லிமிடெட்
ஜியோ டு மற்ற நெட்வொர்க்குகள் 2000 நிமிடங்கள்
நாள் ஒன்றுக்கு 100 எஸ் எம் எஸ்
ஜியோ ஆப்ஸ் சப்ஸ்கிரிப்ஷன் இலவசம்
1 வருட டிஸ்னி ஹாட் ஸ்டார் (399 ரூபாய் மதிப்பிலானது) இலவசம்.

401 ரூபாயில் நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டா

401 ரூபாயில் நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டா

வேலிடிட்டி 28 நாட்கள்
நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டா + 6 ஜிபி
ஜியோ டு ஜியோ அன்லிமிடெட்
ஜியோ டு மற்ற நெட்வொர்க்குகள் 1000 நிமிடங்கள்
நாள் ஒன்றுக்கு 100 எஸ் எம் எஸ்
ஜியோ ஆப்ஸ் சப்ஸ்கிரிப்ஷன் இலவசம்
1 வருட டிஸ்னி ஹாட் ஸ்டார் (399 ரூபாய் மதிப்பிலானது) இலவசம்.

777 ரூபாய் திட்டம்

777 ரூபாய் திட்டம்

வேலிடிட்டி 84 நாட்கள்
நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா+ 5 ஜிபி
ஜியோ டு ஜியோ அன்லிமிடெட்
ஜியோ டு மற்ற நெட்வொர்க்குகள் 3000 நிமிடங்கள்
நாள் ஒன்றுக்கு 100 எஸ் எம் எஸ்
ஜியோ ஆப்ஸ் சப்ஸ்கிரிப்ஷன் இலவசம்
1 வருட டிஸ்னி ஹாட் ஸ்டார் (399 ரூபாய் மதிப்பிலானது) இலவசம்.

2599 ரூபாய்க்கு ஒரு வருட திட்டம்

2599 ரூபாய்க்கு ஒரு வருட திட்டம்

வேலிடிட்டி 365 நாட்கள்
நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா+ 10 ஜிபி
ஜியோ டு ஜியோ அன்லிமிடெட்
ஜியோ டு மற்ற நெட்வொர்க்குகள் 12000 நிமிடங்கள்
நாள் ஒன்றுக்கு 100 எஸ் எம் எஸ்
ஜியோ ஆப்ஸ் சப்ஸ்கிரிப்ஷன் இலவசம்
1 வருட டிஸ்னி ஹாட் ஸ்டார் (399 ரூபாய் மதிப்பிலானது) இலவசம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+