டெல்லி: நாடு முழுவதும் ஜியோ நெட்வொர்க் சேவைகள் சில மணி நேரங்களாகவே முடங்கியுள்ளது. இதன் காரணமாக ஜியோ வாடிக்கையாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜியோவின் வருகைக்கு பிறகு இந்தியாவில் மற்ற நெட்வொர்க்குகளின் பயன்பாடானது பெரிதும் சரிவினைக் கண்டுள்ளது. எனினும் ஜியோவின் சேவையானது குறுகிய காலத்திலேயே பெரியளவில் வளர்ச்சி கண்டுள்ளது.
குறிப்பாக ஜியோவின் இணைய சேவை பயன்பாடானது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
பல பகுதிகளில் முடக்கம்
குறிப்பாக ஜியோ நெட்வொர்க்கின் இணையதள சேவைகள், மெட்ரோ நகரங்களில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இன்று காலை முதல் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சண்டிகர், பெங்களூர், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் ஜியோ நெட்வொர்க் முடங்கியுள்ளதாகவும், இதனால் வாடிக்கையாளார்கள் நெட்வொர்க்கினை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜியோ தரப்பிலும் இப்பிரச்சினை விரைல் சுமூகமாக தீர்க்கப்படும் என அறிவித்துள்ளது.
இவ்வளவு பேர் பாதிப்பு?
தரவின் படி, ஜியோவின் மொபைல் வாடிக்கையாளர்களில் 56% பேர் இந்த நெட்வொர்க் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 35% பேருக்கு சரியான முறையில் சிக்னல் கிடைக்கவில்லை என்றும். 9% பேர் சிக்னல் கிடைப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மொத்தத்தில் நாடு முழுவதும் உள்ள பயனர்கள் ஜியோ நெட்வொர்க்கை அணுக முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.
ஜியோகேர் வேலை செய்யவில்லை
ஜியோகேர் சேவையானது நேற்று இரவில் இருந்தே பல பகுதிகளில் சரியாக வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பிரச்சனை குறித்து ஜியோவிலும் புகார் அளிக்க முடியவில்லை என்று பல தரப்பில் இருந்தும் புகார்கள் எழுந்துள்ளது. அப்படியே தொடர்பு கொண்டாலும், இது குறித்து வாடிக்கையாளர்கள் சேவையில் சரியாக பதிலளிப்பதும் இல்லை என பயனர்கள் ட்விட்டரில் குற்றம் சாட்டி வருகின்றனர்.
1 வாரமாக பிரச்சனை
இது குறித்து ட்விட்டரில் ஒரு பயனர் ஜியோ நெட்வொர்க்கில் 1 வாரமாக பிரச்சனையை எதிர்கொண்டுள்ளேன். நெட்வொர்க்கும் சரியாக இல்லை. கால் செய்யவும் முடியவில்லை என பதிவிட்டுள்ளார்.
ஜியோ பைபர் சேவையும் பல மணி நேரங்களாக சரியாக வேலை செய்யவில்லை என்று கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications