ரிலையன்ஸ் ஜியோ 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. சுமார் 3227 ரூபாய் விலை கொண்ட இந்த திட்டத்தில் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் சப்ஸ்கிரிப்ஷன் சேவையை வழங்குகிறது ஜியோ.
மேற்கூறிய நன்மைகளைத் தவிர, இப்புதிய திட்டத்தில் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவுடன் வருகிறது, இது 1 வருட காலப்பகுதியில் மொத்தம் 730ஜிபி டேட்டாவாகும். மற்ற திட்டங்களைப் போலவே, நீங்கள் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் JioCloud, JioTV மற்றும் இலவச JioCinema ஆகியவற்றிற்கான இலவச அணுகலைப் பெறுவீர்கள்.

தொலைத்தொடர்பு ஆபரேட்டரிடம் இதேபோன்ற விலையில் பிற வருடாந்திர திட்டங்கள் உள்ளன. ஆனால் நாளொன்றுக்கு தரவு அளவு மற்றும் OTT இயங்குதளங்களுக்கான சேவைகள் மாறுபடும்.
இதுவே உங்களுக்கு Sony Liv வேண்டுமெனில் தனி திட்டம் உள்லது, இதேபோல் Zee5 மற்றும் Disney+Hotstar மெம்பர்ஷிப்பில் ஆர்வமுள்ளவர்கள் முறையே ரூ.3,226, ரூ.3,225 மற்றும் ரூ.3,178 திட்டங்களைப் பார்க்கலாம். இது புதிய பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் திட்டத்தைப் போன்ற பலன்களை வழங்குகிறது.
நீங்கள் Zee5 மற்றும் Sony Liv இரண்டிலும் உள்ளடக்கத்தைப் பார்க்க விரும்பினால், ரூ.3,662 திட்டமானது ஒரு வருட வேலிடிட்டியுடன் வருகிறது. ஒரு நாளைக்கு 2.5GB டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS வழங்குகிறது.
இந்த வருடாந்திர திட்ட பட்டியலில் உள்ள மலிவான வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தை வேண்மெனில் OTT தளங்கள் இல்லாமல் ரூ.2,545 திட்டமானது ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 336 நாட்கள் செல்லுபடியாகும்.
ரிலையன்ஸ் ஜியோ போட்டியை சமாளிக்க இதுபோன்ற பல கவர்ச்சிகரமான சலுகைத் திட்டங்களை அறிவித்துக் கொண்டே இருக்கிறது.


Click it and Unblock the Notifications