இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதை காட்டிலும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ள 5ஜி சேவையிலும் முன்னோடியாக உள்ளது.
இதேவேளையில் ஜியோ தனது பேஸ்மென்ட்-ஐ வலிமையாக்க வேண்டும் என்பதற்காக எப்படி 4ஜி சேவை அறிமுகம் செய்த போது இலவசமாக அதன் பின்பு பிற டெலிகாம் நிறுவனங்களை காட்டிலும் குறைவான கட்டணத்தை அறிவித்து வாடிக்கையாளர்களை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.
இந்த நிலையில் இதே மேஜிக்-ஐ பிராண்ட்பேன்ட் சேவையில் ஏற்கனவே கொண்டு வந்த ஜியோ தற்போது புதிதாக போஸ்ட்பெய்ட் பிரிவிலும் அறிமுகம் செய்துள்ளது.
டெலிகாம் சந்தை
இந்திய டெலிகாம் சந்தையில் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் கட்டியாண்டு வரும் ஜியோ, இந்திய சந்தையில் 'கிங்' ஆக உயர வேண்டும் என திட்டமிட்டு உள்ள முகேஷ் அம்பானி Postpaid துறையில் வாடிக்கையாளர்களை அதிகளவில் பெறுவது மட்டும் அல்லாமல் இதிலும் ஏர்டெல் நிறுவனத்தை முந்த வேண்டும் என்ற இலக்கை கொண்டு உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ
இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ புதிதாக போஸ்ட்பெய்டு ஃபேமிலி பிளான் திட்டத்தை துவக்க விலையாக 399 ரூபாய்க்கு அறிமுகம் செய்துள்ளது. இதோடு ஒவ்வொரு add-on இணைப்பிற்கு 99 ரூபாய் கட்டணத்தில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
30 சதவீதம் குறைவு
ரிலையன்ஸ் ஜியோ-வின் இப்புதிய திட்டம் ஏர்டெல், வோடபோன் ஐடியா திட்டங்களை ஒப்பிடுகையில் சுமார் 30 சதவீதம் குறைவாகும். அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் டெலிகாம் சேவை கட்டணத்தை அதிகரிக்க திட்டமிட்டு வரும் வேளையில் 30 சதவீத குறைவான விலையில் போஸ்ட்பெய்டு சேவையை அறிமுகம் செய்துள்ளது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
போட்டியை அதிகரிக்கும்
இந்த அறிவிப்பு டெலிகாம் சந்தையில் போட்டியை அதிகரிக்கும், இதனால் கட்டண உயர்வு ஒத்திவைக்கப்பட அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது, இது கட்டாயம் ஏர்டெஸ் முதலீட்டாளர்களை பாதிக்கும் என சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர். கடந்த 3 மாதத்தில் ஏர்டெல் பங்குகள் சுமார் 8 சதவீதம் சரிந்துள்ளது. இன்று 2.5 சதவீதம் சரிந்து ஏர்டெல் பங்குகள் 752.20 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications