ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு சிறப்பு திட்டம் 2025-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜியோ சந்தையின் போக்கை அடிப்படையாக கொண்டு சிறப்பு புத்தாண்டு ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகம் செய்யும். இந்த திட்டம் மற்ற திட்டங்களை காட்டிலும் சிறப்பு சலுகைகளை கொண்டிருக்கும் காரணத்தால் இதற்கு தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதன் அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோ 2025 ஆம் ஆண்டு புத்தாண்டுக்கு ரூ.2,025 விலையில் கவர்ச்சிகரமான ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் அப்படி என்ன இருக்கு..? வாங்க முழுசா தெரிஞ்சிப்போம்.

200 நாட்கள் வேலிட்டி: இந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் தொடர்ச்சியான இணைப்பை அனுபவிக்க லாபம். எவ்விதமான கூடுதல் ரீசார்ஜ்-ம் தேவையிருக்காது.
வரம்பற்ற 5G தரவு: ஸ்ட்ரீமிங் முதல் கேமிங் வரை உங்கள் அனைத்து ஆன்லைன் செயல்பாடுகளுக்கும் 5G தொழில்நுட்பத்தின் வேகமான வரம்பற்ற இண்டர்நெட் சேவையை அனுபவிக்க முடியும்.
500 GB 4G தரவு: 5G கவரேஜ் இல்லாத பகுதிகளில் கூட, தினமும் சுமார் 2.5 GB அடிப்படையில் 500 GB 4G தரவு பெறலாம்.
வரம்பற்ற குரல் மற்றும் SMS: எந்த வரம்பும் இல்லாத வகையில் குரல் அழைப்புகளை மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவையும் அளிக்கிறது.
ரூ.2,150 மதிப்புள்ள கூட்டாளர் கூப்பன்கள்: இந்த திட்டத்தில் AJIO, Swiggy மற்றும் EaseMyTrip போன்ற பல்வேறு சேவைகளில் தள்ளுபடிகளை வழங்கும் பார்னர் கூப்பன்களுடன் இந்த சிறப்பு புத்தாண்டு திட்டம் வருகிறது.
AJIO தளத்தில் ரூ.2500 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள பொருட்களைக் கொள்முதல் செய்யும்போது ரூ.500 தள்ளுபடி கிடைக்கும் (இணைப்பு இங்கே உள்ளது). புதிய ஆடைகள், ஃபேஷன் ஆக்சஸரீஸ், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளை வாங்க விரும்புபவர்களுக்கு இந்த சலுகை சிறந்தது.
உணவு ஆர்வலர்களுக்கு, ஸ்விக்கி மூலம் ரூ.499 க்கு மேல் மதிப்புள்ள உணவு ஆர்டர் செய்யும் போது ரூ.150 தள்ளுபடி கிடைக்கும். உங்களுக்கு பிடித்த உணவகங்களில் இருந்து சுவையான உணவை ஆர்டர் செய்யவும், வீட்டிலிருந்தே சாப்பிடவும் இந்த சலுகை உதவும்.
பயண ஆர்வலர்களுக்கு, ஈஸ் மை ட்ரிப் இணையதளம் அல்லது மொபைல் செயலியில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது ரூ.1500 வரை தள்ளுபடி வழங்குகிறது.
அதே 200 நாட்களுக்கு ஜியோவின் ரூ.349 மாதாந்திர திட்டத்தை தேர்வு செய்வதை காட்டிலும் இந்த புத்தாண்டு திட்டம் மூலம் ரூ.468 சேமிக்க முடியும். இந்த சிறப்பு சலுகை மக்களுக்கு 2024 டிசம்பர் 11 ஆம் தேதி தொடங்கி 2025 ஜனவரி 11 ஆம் தேதி வரையில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications