ஆசிய கண்டத்தில் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானி, தன் அடுத்த வியாபாரத்தை தேர்வு செய்துவிட்டார் போலத் தெரிகிறது.
ரிலையன்ஸ் குழுமத்தின் எதிர்காலம் வெறுமனே எண்ணெய் சுத்திகரிப்பு மட்டும் கிடையாது என புரிந்து கொண்டு கடந்த 2016-ம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோவைத் தொடங்கினார்,
அதோடு, ரிலையன்ஸின் எதிர்காலம் ரிலையன்ஸ் ரீடெயில் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ தான் என்பதையும் பல இடங்களில் நாசூக்காகச் சொல்லிவிட்டார் முகேஷ் அம்பானி.
ரொம்ப பெருசு
சமீபத்தில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சி இ ஓ சத்யா நாதெல்லா உடன் பேசிய முகேஷ் அம்பானி, இந்தியாவில் ஆன்லைன் கேமிங் இன்னும் பெரிய அளவில் வளர நிறைய வாய்ப்பு இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார். அதோடு இந்தியாவில் இசை, சினிமா, டிவி... இவை எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்தால் கூட, அதை விட ஆன்லைன் கேமிங் பெரிய சந்தை எனச் சொல்லி இருக்கிறார்,
இணையம்
கடந்த 2016-ல், ரிலையன்ஸ் ஜியோ இந்திய டெலிகாம் சந்தையில் நுழைந்த பின் தான், அதிகம் இணையம் பரவத் தொடங்கியது. அதன் பின் தான் யூ டியூப், டிக் டாக் எல்லாமே பிரபலமாகத் தொடங்கியது. அதோடு பப்ஜி போன்ற ஆன்லைன் கேமிங்களும் டிரெண்டாகத் தொடங்கியது. இந்த நேரத்தில் தான், இந்தியாவில், ஆன்லைன் கேமிங் இப்போது தான் வளரத் தொடங்கி இருக்கிறது என அம்பானி சொல்லி இருக்கிறார்.
களம்
2016-ல் ரிலையன்ஸ் ஜியோ ஒரு டெலிகாம் சேவை நிறுவனமாக தொடங்கி, ஜியோ ஃபைபர் நெட் செட் டாப் பாக்ஸ் கொண்டு வந்திருக்கிறார்கள். அதோடு இசைக்கு ஜியோ சாவன், சினிமாக்கு ஜியோ மூவீஸ், சினிமா தயாரிப்புக்கு ஸ்டூடியோ 18, வெப் சீரிஸ்களுக்கு அல்ட் பாலாஜி என ஒவ்வொன்றுக்கும் தனித் தனியாக திட்டமிட்டு களம் இறங்கிக் கொண்டிருக்கிறது முகேஷ் அம்பானியின் ஜியோ.
முதல் நாள் சினிமா
இது எல்லாம் ஒரு ஓரத்தில் வையுங்கள். வாரம் ஒரு முறை, ஒரு சினிமாவை முதல் நாளில், முதல் ஷோவை வீட்டில் இருந்த படியே, ஜியோ செட் டாப் பாக்ஸ் வழியாகப் பார்ப்பதற்கு கூட ரிலையன்ஸ் ஜியோ வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறது. இந்த செய்தியை நாம் நிறைய படித்து இருப்போம்.
அடுத்த இலக்கு
கடந்த 2019-ம் ஆண்டு, ரிலையன்ஸ் ஜியோ தன் ஜியோ ஃபைபர் செட் டாப் பாக்ஸ் அறிமுகப்படுத்தும் போது, புதிய கேமிங் வசதிகளும் கொண்டு வரப்படும் எனச் சொல்லி இருந்தார்கள். அதோடு ஆகாஷ் மற்றும் இஷா அம்பானி, ஜியோ ஃபைபர் நெட் செட் டாப் பாக்ஸில் இருக்கும் கேமிங் வசதிகளை ஒரு டெமோ காட்டியதும் குறிப்பிடத்தக்கது. எனவே அம்பானியின் அடுத்த பெரிய டார்கெட் ஆன்லைன் கேமிங்-ஆக இருக்கலாம் எனச் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications