ரிலையன்ஸ் ஜியோ புதிதாக பட்ஜெட் பிரீபெய்டு ரீசார்ஜ் பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் கட்டணம் வெறும் ரூ.175. ஜியோவின் கட்டண உயர்வால் தொடர்ந்து இழந்து வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பிஎஸ்என்எல் போட்டியை தாக்குப்பிடிப்பதற்காகவும் இந்த சலுகை திட்டத்தை ஜியோ அறிவித்துள்ளது. இந்தப் புதிய திட்டம் டேட்டா சலுகைகள், பிரபல ஓடிடி ஆப்களுக்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
என்டர்டெயின்மென்ட் பிளான் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த பிளான் ஜியோ வெப்சைட், மைஜியோ ஆப்பில் ரூ.175 ரீசார்ச் செய்யும் வசதி உள்ளது. இந்த பிளானின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். தினசரி வரம்பு இல்லாமல் 10 ஜிபி ஹைஸ்பீடு டேட்டா வழங்க உள்ளது.

இதில் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் வாய்ஸ் காலிங் வசதி இதில் கிடையாது.
சோனி லைவ், ஜீ5, ஜியோ சினிமா பிரீமியம், லயன்ஸ்கேட் பிளே, டிஸ்கவரி பிளஸ், சன் நெக்ஸ்ட், கன்ச்சா லன்கா, பிளானட் மராத்தி, சௌபால், டாக்குபே, எபிக் ஆன், ஹோய்சாய் போன்ற பல்வேறு ஓடிடி தளங்களுக்கு இலவச சந்தா இந்த ரூ.175 பிளானில் உள்ளது. இந்த சந்தாக்கள் அனைத்தும் 28 நாள் வேலிடிட்டி காலம் முழுவதும் இருக்கும்.
ஜியோ மூன்று புதிய என்டர்டெயின்மென்ட் பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.329, ரூ.1029, ரூ.1049 ஆகிய கட்டணங்களில் அன்லிமிடட் வாய்ஸ் காலிங், ஓடிடி சந்தாக்கள், தினசரி டேட்டா அலவன்ஸ்கள் அடங்கும்.
இத்துடன் ஜியோவின் இப்போதுள்ள ரூ.355 கட்டணத்தில் ஃப்ரீடம் பிளானில் 30 நாட்கள் வேலிடிட்டி உண்டு. இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், 25 ஜிபி டேட்டா, தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் உள்ளன.
தனியார் ஆபரேட்டர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டண உயர்வுகள் பல பயனர்களை பிஎஸ்என்எல் போன்ற மலிவு மாற்றுகளை நோக்கி செல்ல வைத்தது. இதனால் இந்த ரூ.175 கட்டணத்தில் கவர்ச்சிகரமான ஓடிடி நன்மைகளுடன் செலவு குறைந்த டேட்டா திட்டத்தை வழங்குவதன் மூலம், ஜியோ தனது தற்போதைய வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அண்மையில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட தனியார் டெலிகாம் நிறுவனங்கள் தங்களது பல்வேறு ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்களின் கட்டணங்களை கணிசமாக உயர்த்தின. அத்துடன் பல சலுகைகள் கொண்ட பிளான்களையும் ரத்து செய்தன. ஓடிடி சந்தா வசதி கொண்ட பிளான்களின் கட்டணமும் உயர்த்தப்பட்டன.
இதனால் இந்த தனியார் நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் அரசின் பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்துக்கு மாறத் தொடங்கினர். இதனால் விழித்துக் கொண்ட தனியார் டெலிகாம் நிறுவனங்கள் பெயரளவில் புதிய சலுகை திட்டங்களை அறிவித்து வருகின்றன.
Story written by: Jayachandran
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications