இந்திய டெலிகாம் சந்தையை சரிவில் இருந்து மத்திய அரசு தனது தளர்வு திட்டங்கள் மூலம் காப்பாற்றிய நிலையில் அனைத்து டெலிகாம் நிறுவனங்கள் நிலையான வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்நிலையில் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் டெலிகாம் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டு வரும் நிலையில் ஜூலை மாத வாடிக்கையாளர் எண்ணிக்கை தரவுகள் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.
டெலிகாம் நிறுவனங்கள்
டெலிகாம் நிறுவனங்கள் மத்தியில் அதிகப்படியான போட்டி இருக்கும் நிலையில் ஜூலை மாதம் யாரும் எதிர்பார்க்காத வகையில் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐ மொத்தமாக ஓரம்கட்டியுள்ளது ரிலையன்ஸ் ஜியோ.
ஜியோ vs ஏர்டெல்
ஜூலை 2021ல் ஜியோ நிறுவனம் புதிதாக 6.1 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்று மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 347 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதேபோல் ஏர்டெல் நிறுவனம் சுமார் 2.3 மில்லியன் வாடிக்ரையாளர்களை பெற்றாலும் மொத்த ஆக்டிவ் வாடிக்கையாளர் எண்ணிக்கை 346 மில்லியனாக உயர்ந்துள்ளது.
ஆக்டீவ் வாடிக்கையாளர்கள்
பொதுவாக ஆக்டீவ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் தான் ஒரு டெலிகாம் நிறுவனத்தின் வருவாய் மற்றும் வர்த்தகம் இருக்கும், இதன் மூலம் ஜூலை வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பொருத்து ஜியோ மிகப்பெரிய அளவிலான அதிக்கம் செலுத்தி வருகிறது.
ஜியோ ஆதிக்கம்
சந்தையில் பிற நிறுவனங்களை காட்டிலும் ஜியோ நிறுவனத்தில் டெலிகாம் கட்டணம் குறைவாக இருக்கும் காரணத்தால், ஜியோ போன் விற்பனை சிறப்பாக இருக்கும் காரணத்தாலும், இண்டர்நெட் டேட்டை விலை மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தாலும் வாடிக்கையாளர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து உள்ளது.
35 சதவீத சந்தை
ஜியோ நிறுவனத்தின் ஜூலை வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மூலம் மொத்த சந்தையில் சுமார் 35 சதவீத சந்தையை ஆதிக்கம் செலுத்துகிறது. இது ஜியோ தனது வர்த்தகத்தை நிலை நிறுத்தவும் ஆதிக்கம் செலுத்தவும் சாதகமான வாய்ப்பை உருவக்கியுள்லது.
வோடபோன் ஐடியா
மேலும் வோடபோன் ஐடியா நிறுவனத்தில் ஜூலை 2021ல் 3.3 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்து மொத்த எண்ணிக்கை 238 மில்லியனாக உள்ளது. இதன் மூலம் மொத்த ஆக்டிவ் வாடிக்கையாளர் எண்ணிக்கை 24.06 சதவீதமாக குறைந்துள்ளது.
தொடர் சரிவு
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 32 மாதங்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications