ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம் எதிர்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு அடுத்தடுத்த நடவடிக்கையினை எடுத்து வருகின்றது. குறிப்பாக ஜியோவின் மலிவு விலை சலுகையை பெரிய ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றது. முன்னதாக மலிவு விலையில் ஜியோ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது.
தற்போது அதனை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ லேப்டாப் அறிமுகம் செய்யவுள்ளதாகவும், இந்த லேப்டாப்கள் பட்ஜெட் விலையில் இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
லேப்டாப் திட்டம்
ஏற்கனவே ஜியோ போன், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்ற நிலையில், ஜியோ தற்போது லேப்டாப் திட்டத்தினையும் கையில் எடுத்துள்ளது. இந்த லேப்டாப்-கிற்காக நிறுவனம் மைக்ரோசாப்ட் மற்றும் குவால்காம் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த லேப்டாப் இன்னும் 3 மாதங்களில் சந்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும் எதிர்பார்ப்பு
இது சாமானியர்களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் இருப்பதால், இது சாமானியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் சந்தைக்கு வரும் முன்னரே இது பெரும் எதிர்பார்ப்புகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
ஜியோபுக்
ஜியோபுக் எனப்படும் பட்ஜெட் விலையிலான இந்த லேப்டாப்களில், பல்வேறு முக்கிய அம்சங்கள் இருக்கலாமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 4ஜி லேப்டாப்கள் 4ஜி வசதியுடன் இருக்கும் என்றும், இதன் விலை 184 டாலர்கள் (இந்திய விலையில் 15,000 ரூபாய்) இருக்கலாம் என கூறப்படுகின்றது.
மாபெரும் கூட்டணி
ஜியோ லேப்டாப் குவால்கம் மற்றும் மைக்ரோசாப்ட் உதவியுடன் தயாரிக்கப்படும் நிலையில், விண்டோஸ் ஓஎஸ்-ம் கூடுதலாக இந்த மாபெரும் கூட்டணியின் இணைவதாகவும் தெரிகின்றது. இந்த லேப்டாப்கள் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்களை மையமாக வைத்து இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications