இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ வெள்ளிக்கிழமை தனது ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. வியாழக்கிழமை மும்பை பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் இருந்து நிதிசேவை பிரிவை தனியாக பிரிக்கப்பட்ட நிலையில் ரிலையன்ஸ் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய லாப வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் வெள்ளிகிழமை வர்த்தகத்தில் 3 சதவீதம் வரையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் சரிந்தது இதற்கு முக்கிய காரணம் ரிலையன்ஸ் எண்ணெய் வர்த்தகத்தில் இலக்க அளவில் வருமான சரிவு இருக்கும் என கணிப்புகள் வெளியானது தான்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் இருந்து முதலாவதாக டெலிகாம் சேவை பிரிவான ரிலையன்ஸ் ஜியோ தனது ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ ஜூன் காலாண்டில் வருடாந்திர அளவில் சுமார் 12% உயர்வில் 4863 கோடி ரூபாய் அளவிலான தொகையை மொத்த லாபமாக பெற்றுள்ளது. இதை தொடர்ந்து வரிக்கு பிந்தைய லாபத்தில் 4716 கோடி ரூபாயாக உள்ளது.
மேலும் இக்காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோவின் ஆப்ரேட்டிங் வருவாய் கிட்டத்தட்ட 10% அதிகரித்து 24,042 கோடி ரூபாயாக உள்ளது. 2024 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு அதாவது ஜூன் காலாண்டில் ஜியோவின் மொத்த செலவுகள் கடந்த வருடம் 16,136 கோடி ரூபாயில் இருந்து இந்த வருடம் 17,594 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மொத்த செலவில் பெரு பங்கீட்டை நெட்வொர்க் இயக்கும் செலவுகள் பிரிவில் ஈர்த்துள்ளது. கடந்த ஆண்டு இதே ஜூன் காலாண்டில் ரூ.6,842 கோடியில் இருந்த நெட்வொர்க் இயக்கும் செலவுகள் இந்த வருட ஜூன் காலாண்டில் 7.379 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஜூன் காலாண்டில் லைசென்ஸ் கட்டணம் அல்லது ஸ்பெக்ட்ரம் கட்டணமாக 2,204 கோடி ரூபாயாக உள்ளது, இது ஒரு வருடத்திற்கு முன்பு 2,536 கோடி ரூபாயாக இருந்தது. நிதிச் செலவு பிரிவில் கடந்த ஆண்டு இருந்த 1,006 கோடி ரூபாய் செலவில் 971 கோடியாக குறைந்துள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோவின் ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவு கடந்த ஆண்டை போலவே நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டிலும் 26.2 சதவீதமாக உள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications