இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் இன்று தனது செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இக்காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோவின் நிகர லாபத்தில் 23.4% உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.5,299 கோடி பதிவு செய்திருந்த நிலையில், இக்காலாண்டில் ரூ.6,539 கோடி லாபம் பதவி செய்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவின் ஆப்ரேஷன்ஸ் மூலம் கிடைக்கும் வருவாய் 18% அதிகரித்து ரூ.31,709 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.26,875 கோடி அளவிலான வருவாய் மட்டுமே பதிவு செய்துள்ளது.

இந்த அதிரடி வளர்ச்சி மூலம் ரிலையன்ஸ் ஜியோழின் சராசரியாக ஒரு பயனரின் வருவாய் (ARPU) வருடாந்திர அடிப்படையில் 7.4% அதிகரித்து ரூ.195.1 ஆக உயர்ந்ததுள்ளது. இந்த வருவாய், லாபம், ARPU உயர்வுக்கு வித்திட்டதது ஜியோவின் சமீபத்திய அதிரடியான கட்டண உயர்வுகள் தான். இதன் மூலம் வரும் காலாண்டுகளிலும் கணிசமான வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோவின் காலாண்டு அறிக்கையின்படி, வாடிக்கையாளர் எண்ணிக்கை வருடாந்திர அடிப்படையில் செப்டம்பர் காலாண்டில் 4.2% அதிகரித்து 478.8 மில்லியனாக அதிகரித்துள்ளது.
மேலும் ஜியோ ஏர்ஃபைபர் போன்ற ஹோம் பிராட்பேண்ட் சலுகை உள்ளிட்ட டிஜிட்டல் சேவைகள், ஒட்டுமொத்த வருவாய் மற்றும் வாடிக்கையாளர் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பு செய்துள்ளதாக ஆகாஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.
இதோடு செப்டம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோவின் EBITDA இந்த காலாண்டில் ரூ.15,931 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.13,528 கோடியாக இருந்தது. EBITDA மார்ஜின் அளவு 50.2% ஆக குறைந்துள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications