ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்தின் முக்கிய வர்த்தக பிரிவான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் நிகர லாபம் மார்ச் 31 உடன் முடிவடைந்த காலாண்டில் சுமார் 13 சதவீதம் உயர்ந்து 4,716 கோடியாக அதிகரித்துள்ளது என ஜியோ நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 4,173 கோடி ரூபாயை லாபமாக பெற்று இருந்தது.
மார்ச் காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோவின் ஆப்ரேட்டிங் வருவாய் 23,394 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டு அளவை ஒப்பிடுகையில் வருவாயில் 12 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ஜியோவின் வருவாய் ரூ.20,901 கோடியாக இருந்தது.

மேலும் மார்ச் காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ-வின் உரிமக் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணம் ரூ.2,155 கோடியாக இருந்தது, இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 14 சதவீதம் குறைந்துள்ளது. 2022 ஆம் நிதியாண்டின் மார்ச் காலாண்டில் உரிமக் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணம் ரூ.2,504 கோடியாக இருந்தது.
இதே வேளையில் ரிலையன்ஸ் ஜியோவின் ஒட்டுமொத்த செலவுகள் மார்ச் காலாண்டில் 17,172 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, இது கடந்த ஆண்டு 15,353 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது மட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் ஜியோ சந்தை கணிப்புகளை தாண்டி சிறப்பான லாபம், வருவாய் வளர்ச்சி அளவீடுகளை பதிவு செய்துள்ளது.
டிஸ்னி ஸ்டாரின் நெட்வொர்க் என்டர்டெயின்மென்ட் சேனல்களின் தலைவர் கெவின் வாஸ் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் கெவின் வாஸ் டிஸ்னி ஸ்டாரின் போட்டி நிறுவனமான ரிலையன்ஸ் வயாகாம்18 நிறுவனத்தில் முக்கிய பதவியில் சேர உள்ளார். டிஸ்னி ஏற்கனவே உலகளாவிய பணிநீக்க திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ 2023 ஆம் நிதியாண்டில் 29.2 மில்லியன் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. மேலும் மார்ச் காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோவின் ARPU அளவு அதாவது ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் சராசரி வருமானத்தின் அளவு 6.7 சதவீதம் அதிகரித்து 178.8 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications