இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ, அதன் ஜூன் காலாண்டு அறிக்கையினை இன்று வெளியிட்டுள்ளது.
ஜூன் காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 24% அதிகரித்து, 4335 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே காலகட்டத்தில் வருவாய் விகிதம் 21.5% அதிகரித்து, 21,873 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. தொலைத் தொடர்பு துறையில் நிலவி வரும் சவால்களுக்கு மத்தியில், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது லாபத்தினை அதிகரிக்க வழிவகுத்துள்ளது.
லாபம் அதிகரிப்பு
அதன் லாபம் கடந்த காலாண்டினை காட்டிலும் 3.8% அதிகரித்தும், அதன் வருவாய் விகிதம் 4.6% அதிகரித்தும் காணப்படுகின்றது. லாபத்தில் இருந்தாலும் நிபுணர்களின் மதிப்பீட்டினை விட குறைந்துள்ளது.
ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் அதன் வருவாயினை 23,000 கோடி ரூபாயாகவும், அதன் நிகர லாபம் 4600 கோடி ரூபாயாகவும் இருக்கலாம் என மதிப்பிட்டிருந்தது. இதன் எபிட்டா விகிதம் 3.3% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
அர்பு அதிகரிப்பு
இது ஒரு காலாண்டில் ஒரு பயனுருக்கான சராசரி வருவாய் (அர்பு) மற்றும் அதன் சந்தாதாரர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.
இதன் எபிடா விகிதம் இந்த 27.2% அதிகரித்து, 10,964 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலாண்டில் 8617 கோடி ரூபாயாக இருந்தது. இதே கடந்த காலாண்டினை காட்டிலும் 4.3% அதிகரித்துள்ளது. இது 10,510 கோடி ரூபாயாக இருந்தது.
மார்ஜின்
ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாமின் செயல்பாட்டு மார்ஜின் விகிதமானது, கடந்த ஆண்டினை காட்டிலும் 20 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 26.2% ஆக அதிகரித்துள்ளது. இதே இதன் லாப மார்ஜின் விகிதமானது 40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 16.9% ஆக அதிகரித்துள்ளது
செலவும் அதிகரிப்பு
ஜியோவின் சராசரி வருவாய் ஒரு நபருக்கு கடந்த ஆண்டினை காட்டிலும் 27%மும், கடந்த காலாண்டினை காட்டிலும் 4.8% அதிகரித்தும் காணப்படுகிறது. இது ஒரு வாடிக்கையாளருக்கு 175.7 ரூபாயாகவும் உள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் செலவினங்களும் அதிகரித்துள்ளதால், மார்ஜினில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications