ரிலையன்ஸ் ஜியோ கொடுத்த சூப்பர் அப்டேட்.. தினசரி 2 ஜிபி டேட்டா.. எவ்வளவு கட்டணம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய சூப்பர் திட்டத்தினை, ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

ஜியோ நிறுவனத்தின் இந்த புதிய ரீசார்ஜ் திட்டம் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற ஒரு திட்டமாகும்.

இந்த திட்டத்திற்கான கட்டணம் எவ்வளவு? இதில் வேறென்ன சலுகைகள் எல்லாம் கிடைக்கின்றன. இதில் எவ்வளவு டேட்டா கிடைக்கும். வேலிடிட்டி எவ்வளவு? வாருங்கள் பார்க்கலாம்.

முகேஷ் அம்பானி குடும்பத்திற்கு தொலைபேசி மிரட்டல்... கைதான நபரின் அதிர்ச்சி தகவல்!முகேஷ் அம்பானி குடும்பத்திற்கு தொலைபேசி மிரட்டல்... கைதான நபரின் அதிர்ச்சி தகவல்!

சுதந்திர தின விழாவினை ஒட்டி புதிய திட்டம்

சுதந்திர தின விழாவினை ஒட்டி புதிய திட்டம்

75வது சுதந்திர தின விழாவினையொட்டி ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த திட்டத்தில், தினசரி 2 ஜிபி டேட்டாவினை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான கட்டணம் 750 ரூபாயாகும். இது 90 நாட்கள் வேலிடிட்டியை கொண்ட ஒரு திட்டமாகும். இந்த திட்டமானது ஜியோவின் மை ஜியோ ஆப்பில் பட்டியலிடப்பட்டுள்ளது.

ரூ.750 திட்டம்

ரூ.750 திட்டம்

இந்த திட்டம் 2 வகையான பலன்களைக் கொண்டுள்ளது. ரூ.749 மற்றும் ரூ.1 திட்டம் என இருவகையாக உள்ளது. இதில் ரூ.749 திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டாவினையும், அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவையும், இன்னும் பல நன்மைகளையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் மொத்தம் 180 ஜிபி டேட்டாவினை வழங்குகிறது. இதில் 2 ஜிபி டேட்டா முடிந்த பிறகு 64Kbps டேட்டாவினை வழங்குகிறது. தினசரி 100 இலவச எஸ் எம் எஸ் கிடைக்கிறது.

பல திட்டங்கள்
 

பல திட்டங்கள்

ஜியோவின் இந்த புதிய திட்டம் 249, 299, 533, 719, 1066 மற்றும் 2879 ரூபாய் திட்டங்களோடு சேர்ந்துள்ளது. இந்த திட்டங்களில் 2ஜிபி டேட்டா கிடைக்கும். மேற்கண்ட ஒவ்வொரு திட்டமும் வெவ்வேறு விதமாக டேட்டா மற்றும் பலன்களுடன் கிடைக்கிறது.

மற்ற திட்டங்கள்

மற்ற திட்டங்கள்

இதே 799 ரூபாய் முதல் 1066 ரூபாய் வரையிலான ரிலையன்ஸ் ஜியோ, கூடுதல் சலுகைகளுடன் கிடைக்கிறது. இதில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சேவைகளும் கிடைக்கிறது. இது முன்னதாக 56 நாட்கள் வேலிடிட்டியையும் கொண்டுள்ளது. இது 84 நாட்களாக இருந்தது. இதே ரிலையன்ஸ் ஜியோ 2879 ரூபாய் திட்டத்திற்கு 365 நாட்கள் வேலிடிட்டியாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: jio ஜியோ
English summary

Reliance jio's announced new prepaid plan offers 2GB data per day

Reliance jio's announced new prepaid plan offers 2GB data per day/ரிலையன்ஸ் ஜியோ கொடுத்த சூப்பர் அப்டேட்.. தினசரி 2 ஜிபி டேட்டா.. எவ்வளவு கட்டணம்?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X