இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனங்கள் 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு நிதி திரட்ட வேண்டும் என்பதற்காகவும், குவிந்துக்கிடக்கும் நிலுவை தொகையைக் குறைக்க வேண்டும் என்பதற்காகக் கட்டணத்தைத் தாறுமாறாக உயர்த்தியது.
இதன் அடிப்படையில் இந்தியாவின் முன்னணி மற்றும் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ அனைத்து ப்ரீபெய்டு திட்டத்தின் கட்டணத்தையும் உயர்த்தியது.
20% கட்டண உயர்வு
குறிப்பாக அன்லிமிடெட் டேட்டா திட்டம் கொண்ட அனைத்து திட்டத்தின் கட்டணத்தையும் சுமார் 20 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டது.
இந்தக் கட்டண உயர்வு ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது புதிதாக ஒரு திட்டத்தைப் புத்தாண்டையொட்டி வெளியிட்டுள்ளது ரிலையன்ஸ் ஜியோ.
முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் ஜியோ தற்போது அறிவித்துள்ள புதிய திட்டத்தின் பெயர் Happy New Year offer, பெயருக்கு ஏற்றார் போலவே இது வருடாந்திர திட்டமாக உள்ளது. அதாவது வருடம் 365 நாட்களுக்குமான திட்டமாக இது உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ
ஜனவரி 2ஆம் தேதி வரையில் மட்டுமே இருக்கும் இத்திட்டம் ஏற்கனவே ஜியோ தளத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இப்புதிய Happy New Year offer-ஐ ரீசார்ஜ் செய்யும் ஜியோ வாடிக்கையாளர்களுக்குத் தினமும் 100 SMS, தினமும் 1.5 ஜிபி இண்டர்நெட் டேட்டா, அன்லிமிடெட் டாக்டைம் ஆகியவை கொடுக்கப்படுகிறது.
2,545 ரூபாய் மட்டுமே
இந்தச் சிறப்புத் திட்டத்தின் விலை 2,545 ரூபாய் மட்டுமே, மேலும் இது வருடம் முழுக்க வேலிடிட்டி இருக்கும் காரணத்தால் அதிகப்படியான பலன் கிடைக்க உள்ளது. இத்திட்டத்திற்குப் பெரிய அளவிலான வரவேற்பு கிடைக்கும் என ஜியோ நம்பும் நிலையில், உண்மையில் ஒரு வருட ரீசார்ஜ் திட்டத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை ஜியோ அறிவித்தால் சந்தையில் இதன் தாக்கத்தைக் கணிக்க முடியும்.
டிராய் அமைப்பு
டெலிகாம் கட்டுப்பாட்டு அமைப்பான டிராய் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி அக்டோபர் மாதம் ரிலையன்ஸ் ஜியோ சுமார் 17 லட்சம் வாடிக்கையாளர்களைப் புதிதாகச் சேர்த்து உள்ள நிலையில், பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா அதிகளவிலான வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.


Click it and Unblock the Notifications