நீங்க ஜியோ வாடிக்கையாளரா.. இதே ஜியோவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொலைத் தொடர்பு துறையில் முன்னணியில் இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது, தனது புதிய கட்டண விகிதங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வர உள்ளது.

 

கடந்த வாரத்திலேயே இது குறிப்பான அறிவிப்புகள் வந்திருந்தாலும், என்னென்ன சலுகை, எவ்வளவு கட்டண உயர்வு என இதுபோன்ற அறிவிப்புகள் எதுவும் தெளிவாக வெளியாகவில்லை.

குறிப்பாக ஜியோ 40 சதவிகித கட்டண உயர்வு இருக்கும் என்றும் கருதப்பட்டது. அதே சமயம் 300 மடங்கு சலுகைகளும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இரட்டை உலக சாதனை..! இத்தனை லட்சம் கோடி திரட்டி இருக்கிறார்களா சவுதி அராம்கோ..!இரட்டை உலக சாதனை..! இத்தனை லட்சம் கோடி திரட்டி இருக்கிறார்களா சவுதி அராம்கோ..!

எதிர்பார்ப்பில் மக்கள்

எதிர்பார்ப்பில் மக்கள்

ஜியோ என்றாலே பலத்த சலுகையை கொடுக்குமே என்ற காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு என்ன செல்லியிருக்கிறது ஜியோ. நாங்க சும்மாவே கலக்குவோம், இப்ப மட்டும் அமைதியா விட்டுடுவோமா? என்ற நிலையில் ஜியோ என்ன குண்டை விட போகிறதோ என்ற பரிதவிப்பில் இருக்கும் மற்ற நிறுவனங்கள் ஒரு புறம். மறுபுறம் என்ன சலுகைகளை கொடுக்க உள்ளதோ என்ற எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள். இப்படி ஒரு எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜியோவின் புதிய திட்டங்கள் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வர உள்ளன.

என்னென்ன சலுகை?

என்னென்ன சலுகை?

பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில், தற்போது தான் ஜியோ உயர்த்தியுள்ளது. இந்த நிறுவனங்களின் கட்டண அதிகரிப்பு சராசரியாக 15 - 47 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தினசரி 1.5 ஜிபி டேட்டாவுடன் புதிய ஆல் இன் ஒன் பேக்குகளுடன், ஒரு வருடத்துக்கு 2,199 ரூபாய் திட்டம் வரை அறிமுகப்படுத்தியுள்ளது ஜியோ.

ரூ.199 பிளானில் என்ன சலுகை
 

ரூ.199 பிளானில் என்ன சலுகை

ஜியோவின் 199 ரூபாய் பிளானில் ஜியோ - ஜியோ கால்களுக்கு அன்லிமிடெட் கால்களும், இதே ஜியோ - மற்ற நெட்வொர்க்குகளுக்கு முதல் 1000 நிமிடங்கள் இலவசம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தவிர தினசரி 1.5 ஜிபி டேட்டாவும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த பிளான் 28 நாட்களுக்கு வேலிடிட்டியை கொண்டிருக்கும் கூறப்பட்டுள்ளது.

ரூ.249 பிளானில் என்ன சலுகை?

ரூ.249 பிளானில் என்ன சலுகை?

இந்த திட்டத்தினை பொறுத்த வரை அதிகளவில் டேட்டா உபயோகிப்பவர்களுக்கும், பேசுபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இது தவிர ஜியோ - ஜியோவுக்கு அன்லிமிடெட் கால்களும், இதே ஜியோ - மற்ற நெட்வொர்க்குகளுக்கு 2000 இலவச நிமிடங்களும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த திட்டமும் 28 நாட்களுக்கு வேலிட்டியை கொண்டுள்ளது.

மாதம் 349 ரூபாய் திட்டம்

மாதம் 349 ரூபாய் திட்டம்

இந்த திட்டமானது 28 நாட்களுக்கு வேலிட்டியை மட்டுமே கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மற்ற திட்டங்களைப் போலவே ஜியோ- ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் கால் சேவையும், இதே ஜியோ முதல் மற்ற நிறுவனங்களுக்கு 3000 நிமிடங்களுக்கு இலவச சேவைகளும் வழங்கப்பட்டுள்ளது. எப்படி எனினும் மிக அதிகளவில் டேட்டா உபயோகிப்பவர்களுக்கு இந்த திட்டம் உபயோகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இரு மாதங்களுக்கு என்ன திட்டம்?

இரு மாதங்களுக்கு என்ன திட்டம்?

இந்த திட்டமானது 56 நாட்களுக்கு வேலிடிட்டி அளிக்கப்பட்டுள்ளது. 399 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் போது, தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஜியோ - ஜியோ அன்லிமிடெட் சேவையும், இதே ஜியோ மற்ற நெட்வொர்க்களுக்கு 2000 நிமிடங்கள் இலவசம் என்றும் கூறப்பட்டுள்ளது.

444 ரூபாய் பிளானில் என்ன சலுகை?

444 ரூபாய் பிளானில் என்ன சலுகை?

இந்த 444 ரூபாய் திட்டமானது 56 நாட்களுக்கு இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டாவும், ஜியோ - ஜியோவுக்கு அன்லிமிடெட் கால்களும், இதே ஜியோ - மற்ற நெட்வொர்க்குகளுக்கு முதல் 2000 நிமிடங்கள் இலவசம் என்றும் கருதப்படுகிறது.

84 நாட்களுக்கான திட்டம்

84 நாட்களுக்கான திட்டம்

இந்த திட்டமானது 84 நாட்களுக்கு செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு 555 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இந்த திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படும் என்றும், இந்த திட்டத்தில் ஜியோ - ஜியோ இலவச சேவைகளையும் வழங்கப்படுகிறது. மற்ற திட்டங்களை போலவே ஜியோ - மற்ற நெட்வொர்க்குகளுக்கு 3000 இலவச நிமிடங்களும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

599 ரூபாய் திட்டத்தில் என்ன சலுகை?

599 ரூபாய் திட்டத்தில் என்ன சலுகை?

இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டாவை வழங்கியுள்ளது. இந்த திட்டம் 84 நாட்களுக்கு வேலிடிட்டி என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இதில் ஜியோ -ஜியோ அன்லிமிடெட் இலவச கால்களும், இதே ஜியோ - மற்ற நெட்வொர்க்குகளுக்கு 3000 நிமிடங்கள் இலவசம் என்றும் கருதப்படுகிறது.

ஒரு வருட திட்டம்

ஒரு வருட திட்டம்

இந்த வருட திட்டத்திற்கு 2,199 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் வருடத்திற்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் ஜியோ - முழுக்க முழுக்க இலவச கால்களும், இதே மற்ற நெட்வொர்க்குகளுக்கு 12,000 நிமிடங்கள் இலவசம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டமானது 365 நாட்களுக்கு வேலிட்டியை கொண்டுள்ளது.

ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு என்ன சலுகை?

ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு என்ன சலுகை?

ஜியோ டிவியில் 600 சேனல்கள், இதனுடன் 100 ஹெச் டி சேனல்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதே ஜியோ சினிமாவில் 10000 படங்களும், டிவி ஷேக்களும், இது தவிர இன்னும் பல சலுகைகளும் இதில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இது தவிர ஜியோ JioSaavn, JioSecurity, JioCloud, JioHealthHub உள்ளிட்ட பல சேவைகளிலும் பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

மற்ற நிறுவனங்களோடு ஒப்பிடும்போது கம்மி தான்

மற்ற நிறுவனங்களோடு ஒப்பிடும்போது கம்மி தான்

ஆய்வாளர்கள் மத்தியில் ரிலையன்ஸ் ஜியோவின் ஒரு மாத திட்டமானது, மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களோடு ஒப்பிடும்போது 16 -20 சதவிகிதம் குறைவும் என்று கூறப்படுகிறது. இதே மூன்று மாத திட்டங்களுக்கு 7- 14 சதவிகிதம் கட்டண குறைவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எப்படியோங்க ஜியோவில் கட்டண உயர்வு இருந்தாலும், மற்ற நிறுவனங்களோடு ஒப்பிடும்போது கட்டணம் குறைவு தானாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance jio’s new recharge plans and offers starts from today, pls check here an offers

Reliance jio’s new recharge plans and offers starts from today, jio announced lot of packs. It’s given some offers and recharge plans.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X