ஜியோவின் அட்டகாசமான சலுகை.. ரூ.129ல் இருந்து ஆரம்பம்.. என்னென்ன அம்சங்கள்?

ஜனவரி 1லிருந்து மற்ற தொலைத் தொடர்ந்து நிறுவனங்களோ கதிகலங்கி போகும் அளவுக்கு, அதிரடி சலுகையை அறிவித்த ஜியோ நிறுவனம், கையோடு சில சலுகை திட்டங்களையும் அறிவித்தது.

ரிலையன்ஸ் ஜியோவின் வருக்கைக்கு பின்னர், மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள், அடுத்து என்ன சலுகையை கொடுக்கப்போகிறதோ? அதற்கு ஏற்ப திட்டங்களை வடிவமைக்க வேண்டிய நிலையில் உள்ளன.

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ஜியோவில், மீண்டும் இலவச வாய்ஸ் கால் சேவையை கொண்டு வந்துள்ளது.

குறைந்த கட்டணம்

குறைந்த கட்டணம்

இந்தியா முழுவதும் சிறந்த 4ஜி சேவையினை வழங்கி வரும் ஜியோ நிறுவனம், ஏற்கனவே குறைந்த கட்டணத்தில் தனது சேவைகளை வழங்கி வருகின்றது. உண்மையில் ஜியோவின் வருகைக்கு பின்னர், டேட்டா கட்டணங்கள் கணிசமான அளவு குறைந்துள்ளது. இந்த நிலையில் அண்மையில் வாடிக்கையாளர்களை அதிருப்திக்கு உள்ளாக்கும் வகையில் ஐயூசி கட்டணத்தினை கொண்டு வந்தது.

ரீசார்ஜ் திட்டங்கள் மாற்றம்

ரீசார்ஜ் திட்டங்கள் மாற்றம்

இந்த நிலையில் புத்தாண்டு முதல் வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தும் விதமாக ஐயூசி கட்டணத்தினை ரத்து செய்தது. இதனால் இனி அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் இலவசமாகவே அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் சில ரீசார்ஜ் திட்டங்களையும் ஜியோ மாற்றியமைத்துள்ளது. அதில் ஜியோவின் இந்த இலவச சேவையை பெற முடியும்.

குறைந்த விலையில் திட்டங்கள்

குறைந்த விலையில் திட்டங்கள்


தற்போது ஜியோவின் 149, 129 ரூபாய், 199 ருபாய் மற்றும் 555 ரூபாய் திட்டங்கள் மூலம் இலவச கால் சேவைகளை பெற முடியும். இதில் 129 திட்டத்தில் 2ஜிபி டேட்டாவினை வழங்குகிறது. இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களையும் பெற முடியும். இது அதிக டேட்டா வேண்டாம் எனும் வாடிக்கையாளர்களுக்கு, இந்த கால் சேவை பெரும் பயனுள்ளதாக இருக்கும்.

ரூ.149 திட்டத்தில் என்ன சலுகை

ரூ.149 திட்டத்தில் என்ன சலுகை

இதே 149 ரூபாய் திட்டத்தில் தினசரி 1 ஜிபி டேட்டா வழங்குகிறது. இதன் வேலிட்டி 24 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தில் 100 இலவச எஸ் எம் எஸ் சலுகையும் உண்டு. இது தவிர ஜியோ ஆப்களுக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது. அதி டேட்டா வேண்டாம், ஆனால் கால் சேவை வேண்டும் என்பவர்களுக்கு இந்த திட்டம் போதுமானதாக இருக்கும்.

ரூ.199 திட்டத்தில் என்ன சலுகை

ரூ.199 திட்டத்தில் என்ன சலுகை


இதே 199 ரூபாய் திட்டத்தில் தின்சரி 1.5 ஜிபி டேட்டாவினை பெற முடியும். இதன் வேலிடிட்டி 28 நாட்களாகும். இதன் மூலம் அனைத்து மொபைல் நெட்வொருக்குகளுக்கும் இலவச கால்களை பெற முடியும். இது தவிர ஒரு நாளைக்கு 100 இலவச மேசேஜ் களையும் பெற்றுக் கொள்ள முடியும். இது தவிர ஜியோவின் சில பயன்பாடுகளையும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ரூ.555 திட்டத்தில் என்ன சலுகை?

ரூ.555 திட்டத்தில் என்ன சலுகை?

இந்த 555 ரூபாய் திட்டத்தில் ஒரு நாளை 1.5ஜிபி டேட்டாவினை பெற முடியும். ஆனால் இதன் வேலிடிட்டி 84 நாட்களாகும். இந்த திட்டம் வரம்பற்ற கால் சேவையினையும், இலவ்ச எஸ் எம் எஸ் சேவையினையும் பெற முடியும். இதனுடன் ஜியோவின் சில ஆஃப் சலுகைகளையும் பெற முடியும்.

வாடிக்கையாளர்களுக்கு நல்ல விஷயம் தான்

வாடிக்கையாளர்களுக்கு நல்ல விஷயம் தான்

இடைப்பட்ட காலத்தில் ஐயூசி கட்டணத்தினை வசூலித்த ஜியோ நிறுவனம், தற்போது மீண்டும் இலவச சேவையை வழங்க தொடங்கியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் குறைந்த செலவில் வரம்பற்ற கால் சலுகைகளை பெற முடியும். உண்மையில் இது ஜியோவின் வாடிக்கையாளர்களுக்கு நல்லதொரு விஷயம் தான். மேலும் இந்த திட்டம் அதன் அடித்தளத்தினை மேலும் வலுப்படுத்த உதவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+