ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் முதல் சோதனையாக ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தை தனியாக பிரித்து பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் வேளையில் அடுத்து முகேஷ் அம்பானியின் திட்டம் என்னவாக இருக்கும் என Jeffries செம கணிப்பை வெளியிட்டு உள்ளது.
சர்வதேச அளவில் பிரபலமான ப்ரோகரேஜ் நிறுவனமான ஜெப்ரீஸ் வெளியிட்டுள்ள கணிப்பில், ரிலையன்ஸ் ஜியோ அடுத்த 4 முதல் 5 வருடத்தில் தனியாக பிரிக்கவோ அல்லது ஐபிஓ வெளியிடப்படும். இதே வழியில் ரிலையன்ஸ் ரீடைல், ரிலையன்ஸ் நியூ எனர்ஜி பிஸ்னஸ் பிரிவும் இதேபோல் பிரிக்கப்படலாம் என தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 46வது வருடாந்திர கூட்டத்தின் முடிவில் முகேஷ் அம்பானி பேசுகையில், அடுத்த 5 வருடத்திற்கு ரிலையன்ஸ் குழுமத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனராக தொடர உள்ளதாக அறிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக குழுவில் முகேஷ் அம்பானி வாரிசுகளும், டெலிகாம், ரீடைல், நியூ எனர்ஜி பிரிவின் தலைவர்களான ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, அனந்த் அம்பானி ஆகியோரை Board of Directors ஆக நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளையில் நீதா அம்பானியை நிர்வாக குழுவில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளார். இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அடுத்த தலைமுறையின் கைகளுக்கு கொடுக்க தயாராகியுள்ளது. இந்த வருடாந்திர கூட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுவது குறித்த ரோடுமேப் குறித்து பலரும் பேசாதது குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications