Reliance Jio-ல் முதலீடு செய்யும் முபதாலா டீலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகேஷ் அம்பானிக்கு அதிகம் இண்ட்ரோ தேவை இல்லை. அதே போல, அவரின் ரிலையன்ஸ் ஜியோ கம்பெனி பற்றியும் அதிகம் அறிமுகம் தேவை இல்லை.

கிட்டத்தட்ட இந்த செய்தியை கூட நீங்கள் ஜியோவின் இணைய உதவியால் படித்துக் கொண்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.

சரி விஷயத்துக்கு வருவோம். முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவில், முபதாலா கம்பெனி சுமாராக 1.2 பில்லியன் டாலர் (9,093 கோடி ரூபாய்) முதலீடு செய்ய இருக்கிறது. இந்த டீலில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களைத் தான் இங்கே பார்க்க இருக்கிறோம்.

6-வது முதலீடு

6-வது முதலீடு

1. இந்த ரிலையன்ஸ் ஜியோ - முபதாலா டீல் வழியாக, முபதாலா முதலீடு செய்யும் பணத்துக்கு, ரிலையன்ஸ் ஜியோவில் இருந்து 1.85 சதவிகித பங்குகள் கொடுக்கப்படுமாம்.
2. கடந்த ஆறு வாரத்தில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவில் செய்யப்படும் ஆறாவது முதலீடு இது.

ரிலையன்ஸ் ஜியோ மதிப்பு

ரிலையன்ஸ் ஜியோ மதிப்பு

3. முபதாலா டீலில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை 4.91 லட்சம் கோடி ஈக்விட்டி மதிப்பாகவும், 5.16 லட்சம் கோடி ரூபாயை எண்டர்பிரைஸ் மதிப்பாகவும் மதிப்பிட்டு இருக்கிறார்கள்.
4. முபதாலாவின் முதலீட்டையும் சேர்த்து, ரிலையன்ஸ் ஜியோ இதுவரை 87,655 கோடி ரூபாயை திரட்டி இருக்கிறதாம். இதற்கு முன் ஃபேஸ்புக், கே கே ஆர், சில்வர் லேக், விஸ்டா ஈக்விட்டி, ஜெனரல் அட்லாண்டிக் போன்றவர்கள் முதலீடு செய்து இருக்கிறார்கள்.

Portfolio

Portfolio

5. முபதாலா முதலீட்டுக் கம்பெனி, உலகம் முழுக்க முதலீடு செய்து ஒரு Portfolio யோவை நிர்வகிக்கும் கம்பெனி. இது முழுக்க முழுக்க அபுதாபி அரசுக்கு சொந்தமான முதலீட்டுக் கம்பெனி என்பது குறிப்பிடத்தக்கது.
6. முபதாலா சுமாராக 229 பில்லியன் டாலர் பணத்தை உலகின் ஐந்து கண்டங்களிலும் முதலீடு செய்து நிர்வகித்து வருகிறது.

கடன்  விவரம்

கடன் விவரம்

ரிலையன்ஸ் கம்பெனி சுமாராக 5.4 லட்சம் கோடி ரூபாயை பல வியாபாரங்களில் முதலீடு செய்தது. அதிலும் குறிப்பாக 3.5 லட்சம் கோடி ரூபாயை ரிலையன்ஸ் ஜியோவில் மட்டும் முதலீடு செய்தார்கள். மார்ச் 2020 கணக்குப் படி, ரிலையன்ஸின் மொத்த கடன் 3.36 லட்சம் கோடி ரூபாய். ரிலையன்ஸ் கையில் இருக்கும் பணம் 1.75 லட்சம் கோடி ரூபாய். ஆக மீதி இருக்கும் 1.61 லட்சம் கோடி ரூபாய் தான் நிகர கடன்.

மார்ச் 2021

மார்ச் 2021

வரும் மார்ச் 2021-க்குள், தன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியை, கடன் இல்லாத கம்பெனியாக மாற்றுவேன் எனச் சொல்லி இருந்தார். மேலே சொன்ன நிகர கடனைத் தான், மார்ச் 2021-க்குள், முகேஷ் அம்பானி முழுமையாக காலி செய்ய இவ்வளவு உழைத்துக் கொண்டு இருக்கிறார். அவர் நினைத்தது போலவே பணமும் கொட்டிக் கொண்டு இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance jio to receive investment from Mubadala Key things to know

Reliance jio to receive investment from Mubadala Key things to know, Mubadala company is going to invest in reliance jio around 1.2 billion dollar.
Story first published: Friday, June 5, 2020, 18:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X